சில குடும்பங்களில் எவ்வளவு தான் பணம் வந்தாலும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். இன்னும் சில வீடுகளில் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். வீட்டில் செல்வத்தை ஈர்க்கக்கூடிய குபேர மூலை பலவீனமாக இருந்தால் செல்வம் தங்காது என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதாவது குபேர மூலை என்பது ஒவ்வொரு வீட்டிலும் குபேர பகவானுக்காக இருக்கக் கூடிய ஒரு இடமாகும்.
செல்வ அதிபதியாக இருக்கும் குபேரனின் திசை வடக்கு திசை. இந்தத் திசையில் தான் குபேர மூலையும் இருக்க வேண்டும். அதோடு புதன் கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்த திசையாகவும் வடக்கு திசை கருதப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த வடக்கு திசையை சரியாக பராமரித்தால் பணப் பிரச்சனை படிப்படியாகக் குறைந்து அதிர்ஷ்டம் அதிகரிக்கத் தொடங்கும்.
உங்கள் வீட்டு குபேர மூலையை ஆக்டிவேட் செய்து பணப் பிரச்சனையை குறைக்க நீங்கள் கீழ்காணும் 5 விஷயங்களைச் செய்யலாம்.
வடக்கு திசையை சுத்தம் செய்யுங்கள்: செல்வம் பெருக வேண்டுமானால் அதற்கு சுத்தம் மிக மிக முக்கியம். எந்த அளவுக்கு உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறீர்களோ? அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். அதிலும் குறிப்பாக வீட்டின் வடக்கு திசையில் எந்த ஒரு தேவையற்ற பொருளையும் வைக்கக்கூடாது. சிலர் குப்பை தொட்டிகளை வடக்கு திசையில் விவரம் தெரியாமல் வைத்திருப்பார்கள். தேவையற்ற பொருட்கள், பழைய பொருட்கள் போன்றவற்றை வடக்கு திசையில் இருந்து அகற்றினால் வீட்டில் ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி ஏற்பட தொடங்கும்.
குபேர எந்திரம்: வீட்டின் வடக்கு திசையில் ஒரு குபேர எந்திரத்தை வாங்கி வைக்கலாம். குபேர எந்திரம் செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த எந்திரத்தோடு சேர்த்து பச்சை, நீலம், ஊதா நிறங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், மீன் தொட்டிகள், கண்ணாடி சாமான்கள், போன்றவற்றையும் சேர்த்து வைக்கலாம்.
தவறான இடத்தில் இருக்கும் பாத்ரூம்கள்: ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கே தெரியாமல் பாத்ரூம், கழிப்பறை போன்றவற்றை வடக்கு திசையில் கட்டி விடுகின்றனர். இதுபோன்ற தவறுகளாலும் பண பிரச்சினை வரத் தொடங்கும். இதற்கு பரிகாரமாக ஒரு சிறிய கண்ணாடி அல்லது வீட்டிற்குள் வளரக்கூடிய செடிகளை வைக்கலாம். அதே போல வடக்கு திசையில் பெரிய கனமான பொருட்கள் எதையும் வைக்க கூடாது.
பணப்பெட்டி: சிலர் பணப்பெட்டி, நகை பெட்டி போன்றவற்றை தவறான திசையில் வைத்து பயன்படுத்துகின்றனர். இதனாலும் பணவிரயம் ஏற்படும். எனவே பணப்பெட்டியை திறக்கும் போது அது வடக்கு நோக்கி திறக்கும் படி வைத்திருந்தால் செலவுகள் குறைந்து பணவரவு அதிகரிக்கத் தொடங்கும்.
உங்கள் வீட்டு குபேர மூலையை பராமரிக்க நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட உங்களுடைய பணப் பிரச்சனையை நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வித்திடும். அதோடு சாஸ்திரம் சொல்லும் விஷயங்களை செய்தால் குபேர பகவானின் பூரண அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
More Articles
- திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?
- ரூ.750 சம்பளத்தில் கார்மெண்ட்ஸ் வேலை முதல் சினிமா வரை: வெளிவராத நடிகர் சூர்யாவின் மறுபக்கம்..!!
- ”பணம் ஈஸியா கிடைக்காதுப்பா..” – மகனுக்கு நடிகர் மாதவன் சொன்ன அறிவுரை வைரல்..!!
- ரூ.275 கோடி ரூ.2 லட்சமாக குறைந்தது..!! ஒரே ஆண்டில் அடியோடு மாறிய விஜய் வாழ்க்கை..!!
- தங்கம் Vs ரியல் எஸ்டேட் : முதலமைச்சர் விஜய்-இன் சாய்ஸ் எது? விஜய் கற்றுத்தரும் முதலீட்டு பாடம்..!!
- முதலமைச்சர் பதவியை விடுங்க..!! விஜய்க்கு மாசம் வட்டி வருமானமே எத்தனை கோடி வருது தெரியுமா?