இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இதில் தீவிரமாக செயல்பட்டு வரும் அதானி குழுமம் இந்தியாவில் மின்சாரம், சாலை, உள்கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம் என பல துறையில் பெரும் முதலீடுகளை செய்தும் இதேவேளையில் உலக நாடுகளுக்கும், இந்தியாவுக்குமான இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வெளிநாட்டு உள்கட்டமைப்புகளை வாங்கி வருகிறது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் அதானி துறைமுக பிரிவான அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறைமுக ஆப்ரேட்டரான அசோசியேட் பிரிட்டிஷ் போர்ட்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்க திட்டமிட்டு இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ஏளது.

Advertisement

இந்த அசோசியேட் பிரிட்டிஷ் போர்ட்ஸ் நிறுவனம் பிரிட்டன் நாட்டில் சுமார் 21 துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இயங்கி வரும் மிக முக்கியமான நிறுவனமாகும்.

இந்த செய்தி வெளியாக 2 நாட்களில் அதானி குழுமம் இத்தாலி நாட்டில் சிசிலி தீவில் இருக்கும் Catania விமான நிலையத்தை வாங்குவதற்கான முயற்சியில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சிசிலி நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம், இத்தாலி நாட்டின் 5வது பெரிய விமான நிலையம் தான் Catania Airport.

இந்த விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் இத்தாலி கடந்த 2022ல் இருந்து பணியாற்றி வருகிறது. இந்த பயணத்தில் பல தடுமாற்றங்கள் மூலம் காலதாமதமான நிலையில் தற்போது இந்த விமான நிலையத்தை வாங்க தகுதியுடைய நிறுவனங்கள் என 10 நிறுவனங்களை தேர்வு செய்து 2வது கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இதில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனமும் இடம்பெற்றுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

தற்போது Catania airport-ஐ இயக்கும் SAC அமைப்பு இந்த விமான நிலையத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மே மாதம் பணிகளை துவங்கிய நிலையில் 10 பேர் கொண்ட பட்டியல் 2வது கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த 51 சதவீத பங்குகள் 500-600 மில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.