ஒருகாலத்தில் ஐடி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருந்தது, ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த கதை மொத்தமாக மாறியுள்ளது.

Advertisement

தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் எப்போதும் இல்லாமல் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியர்களுக்கு அதிக சம்பளத்தில் (ஐடி ஊழியர்களின் சம்பளத்தை காட்டிலும் அதிக சம்பளம்) வேலை கொடுக்க நிறுவனங்கள் தயாராகியுள்ளது. இதற்கு முதலும் முக்கியமான காரணம் ஏஐ டேட்டா சென்டர்.

Advertisement

ஒரு டேட்டா சென்டருக்கு தடையில்லாத மின்சார இணைப்பு, கூலிங் சிஸடம், மொத்த உள்ளக்கட்டமைப்பையும் நிர்வாகம் செய்ய கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் என ஐடி, டெக் துறையை தாண்டிய பிரிவில் திறன்வாய்ந்த ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் வாயிலாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியர்களுக்கு டிமாண்ட் அதிகரித்து இவர்களுக்கு புதிய பாதை உருவாகியுள்ளது, எப்படி ஏஐ துறையில் இயற்பியல், கணித வல்லுனர்களுக்கு டிமாண்ட் அதிகரித்ததோ அதேபோல.

தற்போது இந்தியாவில் Equinix, எஸ்டிடி, யோட்டா, என்டிடி, அமேசான் வெப் சர்வீசஸ், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் டேட்டா சென்டர்களை அமைத்து வருகிறது. மறுமுனையில் இந்த டேட்டா சென்டர்களுக்கு எல்அண்ட்டி, டாடா ப்ராஜெக்ட்ஸ், Schneider Electric, Vertiv, Siemens, Honeywell மற்றும் Johnson Controls ஆகிய நிறுவனங்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் சேவைகளை வழங்கி வருகிறது.

Advertisement

தற்போதைய வேலைவாய்ப்பு சந்தை நிலவரத்தின் படி ஏஐ இன்பரா இன்ஜினியர்களுக்கு வருடம் 1.-1.5 கோடி ரூபாய் அளவிலான வருமானம் ஈட்டப்படுகிறது, கிரீன்பீல்ட் ஏஐ டேட்டா சென்டர் நிர்வாக தலைவர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் அளிக்கப்படுகிறது.

ஏஐ டேட்டா சென்டர் கூலிங் சிஸ்டம் இன்ஜினியர்களுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான தொகை சம்பளமாக அளிக்கப்படுகிறது. ஏஐ டேட்டா சென்டர் நிர்வாக பணிகளில் ஈடுப்படும் பிரஷ்ஷர் ஊழியர்களுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் அளிக்கப்படுகிறது.

இதனால் பல தரப்பட்ட நிறுனங்களில் தற்போது கோர் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள BOOM என்றால் கோர் இன்ஜினியரிங் பிரிவில் தான், ஐடி துறையில் இன்னும் இதற்கான சிக்னல் வரவில்லை.

Advertisement

மேலும் இந்தியாவில் தற்போது ஏஐ டேட்டா சென்டருக்காக மட்டும் சிறிதும், பெரிதுமாக 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப்படுகிறது.