உலக அளவில் டெக் துறையில் கோலோச்சி வரும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகளால் மனிதர்களின் வேலைக்கு தான் ஆபத்து என்றால் தற்போது டெக் நிறுவனங்களுக்கே அவை ஆபத்தான மாறியுள்ளன.

Advertisement

உலகம் முழுவதும் சிறிய ஐடி நிறுவனங்கள் தொடங்கிய பெரிய டெக் நிறுவனங்கள் வரை ஏஐ பயன்பாட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்தியாவின் பாரம்பரிய ஐடி சேவை துறையில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக், ஏஐ காரணமாக அண்மையில் கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் 50 மில்லியன் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Advertisement

கூகுள் நிறுவனத்திற்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக ஐடி சேவைகள் மற்றும் இன்ஜினியரிங் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன் ஆண்டு மதிப்பு தோராயமாக 200 மில்லியன் டாலர்கள் இந்திய ரூபாயில் சுமார் 1,600 கோடிக்கு மேல் இருக்கும்.

இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் நான்கில் ஒரு பங்கு அதாவது 50 மில்லியன் டாலர் இந்திய ரூபாயில் சுமார் 477 கோடி மதிப்பிலான பணிகளை கூகுள் நிறுவனம் திடீரென ரத்து செய்துள்ளதாம். மென்பொருள் உருவாக்கம் மற்றும் இன்ஜினியரிங் பணிகளை செய்வதற்கு ஏஐ சார்ந்த ஆட்டோமேஷன் கருவிகளை கூகுள் பெருமளவில் பயன்படுத்தி வருவதே இந்த ஒப்பந்த மதிப்பை குறைப்பதற்கு முக்கிய காரணமாகும்.

Advertisement

இதனால் இந்த ஆண்டில் மட்டும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாயில் 50 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பால் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரியளவில் வேலை இழப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு என்பது இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

கூகுள் நிறுவனத்திற்கான இந்த ஒப்பந்தத்தில் பணி செய்து வந்த ஊழியர்கள் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் வேறு பிராஜெக்டுகளுக்கு மாற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.தற்போது ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் தோராயமாக 14.7 பில்லியன் டாலர். இதில் இந்த 50 மில்லியன் டாலர் குறைப்பு என்பது வெறும் 0.3% மட்டுமே என்பதால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இதன் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும்.

Advertisement
Bench விதிகளை மாற்றும் ஐடி நிறுவனங்கள்…!! டிசிஎஸ், இன்போசிஸ் ஊழியர்களே உஷார்..!!

ஆனால் இந்த மாற்றம் ஐடி நிறுவனங்களில் படிப்படியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். அதாவது பெரிய நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த வருவாய் படிப்படியாக குறையலாம். இதனால் அவை தங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், பணிகளை எளிமைப்படுத்தவும் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யலாம். இந்த சமயங்களில் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட்டாக இருக்கும் ஊழியர்களை மட்டுமே ஐடி நிறுவனங்கள் தக்க வைத்து கொள்ளும்.

கோடிங், மென்பொருள் சோதனை மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய ஏஐ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால், முன்பு போல் நூற்றுக்கணக்கான சாப்ஃட்வேர் இன்ஜினியர்களை நம்பியிருக்க வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு இருக்காது. எனவே நிறுவனங்கள் ஊழியர்களை பணி அமர்த்தும் முறையே மாறும்.

Advertisement
EPFO சம்பள வரம்பில் மாற்றம்.. மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.. PF கணக்கில் என்னென்ன மாறுகிறது?

ஐடி துறையில் இது போன்ற அழுத்தங்கள் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கும் வர தொடங்கியுள்ளன. விப்ரோ நிறுவனத்தின் மெட்டா நிறுவன ஒப்பந்தத்திலும் 25% வரை ஒப்பந்த மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாம். ஏஐ-இன் அசுர வளர்ச்சியால், இனிவரும் காலங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்படும் விதமே மாற போகிறது. எனவே ஐடி வேலைகளில் இருப்பவர்களும் அதற்காக படித்து கொண்டிருப்பவர்களும் அப்டேட்டாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.