இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாம் தாய் , தந்தை என இருவருமே வேலைக்கு செல்வதால் குழந்தைகளை day care எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தான் விட்டு செல்கின்றனர். இந்த குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கோடிக்கணக்கான பெற்றோரை பதை பதைக்க வைக்கின்றன.
பெங்களூருவில் ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணியாளர்கள் குழந்தைகளை வாஷிங் மெஷினில் அடைத்தும், முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கொடுமைப்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெங்களூரின் எச்.ஏ.எல்., அருகே புரூக்ஃபீல்டு பகுதியில், கேப் ஜெமினி ஐ.டி., நிறுவனத்தின் வளாகத்தில், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளது. இந்த ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை, இந்த மையத்தில் விட்டு செல்வது வழக்கம். இஅங்கே குழந்தைகளை பராமரிக்க பணியாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த மையத்தில் பராமரிக்கப்படும் 2 முதல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பெற்றோரை தேடி அழும் போது, மையத்தில் உள்ள வாஷிங்மெஷினில் அடைத்து வைப்பது; கழிப்பறை கோப்பை மீது அமர வைத்து தண்ணீரை பீய்ச்சி அடிப்பது; கழிப்பறைக்குள் அடைப்பது என கொடூரமாக செயல்களை, அங்கு வேலை செய்த பணியாளர்கள் ஈடுபட்டது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பான அந்த பராமரிப்பு மையத்தில் வேலை செய்து வந்த மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி, பிந்து ஆகிய, ஐந்து பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு வேலை செய்யும் யாரோ ஒருவர் இந்த கொடுமைகளை மொபைல் போனில் வீடியோ எடுத்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிர இந்த கொடுமைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தங்கள் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு அதிர்ந்து போன பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம், எச்.ஏ.எல்., காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் மற்றும் வீடியோக்கள் அடிப்படையில் ஐந்து பெண் ஊழியர்கள் மீதும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே ஊழியர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு தான் முக்கியத்துவம் என அறிவித்துள்ள கேப் ஜெமினி நிறுவனம் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தை மூடியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளது.
More Articles
- குப்பைகளை அகற்றாவிட்டால் கூடுதல் வரி.. வீட்டு உரிமையாளர்களுக்கு செக் வைத்த மாநகராட்சி..!!
- பெங்களூருக்கு என்னாச்சு.. 31 கிமீ செல்ல 2.5 மணிநேரமா.. இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஷாக் பதிவு!
- டிகே சிவகுமார் ஆட்சியின் முதல் 30 நாட்கள்.. அறிவிப்புகள் பலே.. ஆனா ஒரு பிரச்சனை!
- சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டம்: தொடக்கப்புள்ளி வச்சாச்சு..!! விரைவில் பணிகள் தொடக்கம்..!!
- ரூ.45 லட்சம் சம்பளம்! ஆனா காசு இல்லாமல் தவிக்கும் டெக்கி! கையில வந்த காசு, போன இடம் தெரியல!
- சொந்த ஊரே சொர்க்கம் தான்! பெங்களூரின் ரூ.1.4 லட்சம் சம்பளம் இருந்தும் ஏழை! டெக்கியின் புலம்பலை கேட்டீங்களா?