கார்கள் என்றாலே ஜெர்மன் கார்கள் தான் என்ற நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது, ஒருப்பக்கம் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம், மறுமுனையில் எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் என மொத்த ஆட்டோமொபைல் சந்தையும் மாறி வரும் நிலையில்... இந்த அலையில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது, ஜெர்மனி கார் நிறுவன பிராண்டுகள்.

Advertisement

ஏற்கனவே வோக்ஸ்லவேகன் சுமார் 1 லட்சம் ஊழியர்களையும், 4 தொழிற்சாலைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ், மினி உடன் BMW பிராண்டுகளை உள்ளடக்கிய BMW நிறுவனம் தனிப்பட்ட முறையில் 8000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

இந்த பணிநீக்கத்தை மிகுந்த கவனத்துடன் செய்ய திட்டமிட்டுள்ள BMW நிர்வாகம் ஜெர்மனியில் பணியாற்றும் 85000 ஊழியர்களில் 40000 ஊழியர்களுக்கு தானாக விருப்பு ஒய்வு அறிவிக்கும் வாய்ப்பை BMW கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று வெளியேறும் ஊழியர்களுக்கு உரிய நிதி பலன்களை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதேபோல் இந்த 8000 பேர் வெளியேற்றத்தை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் செய்து முடிக்க திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போது 1,54,000 பேர் பணியாற்றி வருகின்றனர், தற்போது பணிநீக்கம் செய்யப்படும் 8000 ஊழியர்களும் நிர்வாகம் + ஆப்ரேஷன்ஸ் பணியில் இருப்பவர்கள் தான். தொழிற்சாலை ஊழியர்கள் இதில் கைவைக்கப்படவில்லை.

Advertisement

இந்த திட்டத்தை BMW நிர்வாகம் மற்றும் BMW ஊழியர்கள் கவுன்சில் மத்தியில் ஆய்வுக்கும் ஆலோசனைக்கும் உட்படுத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த ஆலோசனை கூட்டம் அடுத்த 6 வாரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

BMW மட்டும் அல்லாமல் ஜெர்மனியில் இருக்கும் பெரும்பலான அனைத்து கார் நிறுவனங்களும் ஒரேமாதிரியான பிரச்சனையை தான் எதிர்கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக் கார் விற்பனையில் லாப மார்ஜின் மிகவும் குறைவு, அமெரிக்காவின் வரி விதிப்பு, சீனாவின் மலிவு விலை கார் மூலம் உருவாகியுள்ள போட்டி காரணமாக ஜெர்மன் கார் நிறுவனங்களுக்கு வர்த்தகம், வருமானம் என இரண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

BMW நிறுவனத்தை போலேவ வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் நிறுவனமும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது. ஜெர்மனி கார் பிராண்டுகளுக்கு சீனா முக்கிய சந்தையாக இருந்து வந்த நிலையில், கடந்த 10 வருடத்தில் சீனாவின் உள்நாட்டு பிராண்டுகளே மேம்பட்ட அதிநவீன கார்களை தயாரித்து வரும் வேளையில் BMW-க்கு என இருந்து கெத்து சீனாவில் குறைந்துள்ளது.

இதன் விளைவாக சீனாவில் BMW பிராண்டின் வர்த்தகம் கடந்த ஒரு வருடத்தில் 30 சதவீதம் குறைந்து 2017ஆம் ஆண்டுக்கு இணையான விற்பனையை பதிவு செய்துள்ளது.