ஒரு சில நேரங்களில் இரண்டு வெவ்வேறு நகை கடைகளில் வெவ்வேறு விதமான விலையில் தங்கம் விற்பனையாவதை பார்த்திருப்போம். அப்போதெல்லாம் எந்த விலை நியாயமானது என்ற சந்தேகம் ஏற்படும். சமீபத்தில் சஞ்சய் கத்தூரியா என்பவர் தனது X பக்கத்தில் நகை வாங்குவதற்கு முன்பு தங்கத்தின் நியாயமான விலையை வாடிக்கையாளர்கள் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? என்பதற்கு ஒரு விடீயோவைப் பகிர்ந்திருந்தார்.

Advertisement

அந்த வீடியோவில் பிரபல ஜுவல்லரி எக்ஸ்பர்ட் எஸ்.எஸ்.ஆலம் தங்கம் வாங்குவதற்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் எந்தெந்த விஷயங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி ஒரு நகைக்கடைக்காரர் தங்கத்தின் அசல் விலை, சேதாரம் மற்றும் செய்கூலி ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிப்பார்.

Advertisement

ஆனால் பெரும்பாலானோர் நகை வாங்கும் போது இறுதி விலையை மட்டும் தான் பார்க்கின்றனர். அசல் விலையை கணக்கிடுவதற்கு கற்றுக் கொண்டால் நாம் சரியாக தான் பணம் செலுத்துகிறோமா? என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

சர்வதேச சந்தையில் தங்கம் டாலரில் வர்த்தகமாகிறது. எனவே டாலர் விலையை முதலில் ரூபாய் மதிப்புக்கு மாற்ற வேண்டும். பின்னர் அதிலிருந்து 1 கிராம் விலையை கண்டுபிடிக்க வேண்டும். அதோடு 6 சதவீத கலால் வரி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.

Advertisement
23 வயதில் 20 கோடி மதிப்புடைய நிறுவனம்! படித்த முடித்த ஒன்றரை வருடத்தில் சாதித்துக் காட்டிய BBA பட்டதாரி!

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,030 டாலராக உள்ளது. இந்தியாவில் 1 டாலரின் மதிப்பு ரூ. 96 வரும்.

இந்திய ரூபாயில் 1 அவுன்ஸ் தங்கம் = $4,030 X ரூ. 96 = ரூ. 3,86,880

1 அவுன்ஸ் தங்கம் = 28.35 கிராம்

1 கிராம் தங்கத்தின் விலை = ரூ. 3,86,880 ÷ 28.35 = ரூ. 13,650

Advertisement

ஒரு கிராம் தங்கத்தின் விலையோடு 6 சதவீத கலால் வரியை சேர்த்தால் ரூ. 819 வரும். இதனால் தங்கத்தின் 1 கிராம் விலை 14,469 ரூபாய் வரும். கூடுதலாக 3 சதவீத ஜிஎஸ்டி ரூ.434-ஐ சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படியானால் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை தோராயமாக 14,903 ரூபாய் வரும்.

24 கேரட் தங்கத்தில் 99.9% தூய தங்கம் இருக்கும். இதை வளைத்து முறுக்கி நகைகள் செய்வது கடினம். ஆனால் ஒரு சில நாடுகளில் 24 கேரட் தங்கத்தின் செய்யப்பட்ட நகைகளும் விற்பனையாகின்றன. நம்மூரில் அதிகமாக 22 கேரட் தங்கத்தில் மட்டுமே நகைகள் செய்யப்படுகிறது.

Advertisement

22 கேரட்டில் 91.6 சதவீத தூய தங்கம் இருக்கும். 24 கேரட் தங்கத்தின் விலையோடு 22 கேரட் தங்கத்தின் தூய்மையை பெருக்கினால் 14,903 × 91.6% = ரூ.13,651 வரும். இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் மதிப்பு செய்கூலி, சேதாரம் மற்றும் பிற செலவுகளை எல்லாம் சேர்க்காமல் கிராம் ஒன்றுக்கு ரூ.13,651 வரும்.

வெவ்வேறு கடைகளிலும் வெவ்வேறு மாதிரியான செய்கூலி மற்றும் சேதாரம் விதிக்கப்படும். ஆனால் தங்கத்தின் விலையை மட்டும் தெரிந்து கொண்டால் அதோடு கடைகள் விதிக்கும் செய்கூலி, சேதாரத்தை எல்லாம் எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.