சென்னையை அடுத்த 20 வருடத்தில் தலைகீழாக மாற்றப்போகும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ள விஜய் தலைமையிலான அரசு வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பெருநகர பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் எப்படி மேம்படுத்தி உலக நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான முறையான மற்றும் நிலையான வளர்ச்சி பாதையை 3வது மாஸ்டர் பிளான் மூலம் உருவாக்கும் பணியை CMDA ஈடுப்பட்டு உள்ளது.

Advertisement

இதற்கான பணிகள் 2020ல் துவங்கிய நிலையில், விஜய் தலைமையிலான அரசு சில முக்கிய மாற்றங்களை செய்து தற்போது சர்வதேச டவுன் பிளானிங் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு செய்து இறுதி திட்டத்தை தீட்ட உள்ளது.

CMDA அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்த தகவல் படி, சென்னையின் 3வது மாஸ்டர் பிளானுக்கான அடிப்படை திட்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு இதை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதன் படி ஆய்வுக்கு பின்பு இறுதி ஒப்புதல் பெற்று, செப்டம்பர் மாதம் வெளியிடுவதற்கான பணிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

கடந்த 5 வருடமாக சுமார் 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் CMDA அமைப்பு சென்னையின் பெருநகர பகுதியின் வளர்ச்சிக்கா 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் சென்னை நகரின் அடுத்த 20 வருட வளர்ச்சி அதாவது 2047ஆம் ஆண்டுக்கான வளர்ச்சிக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் இத்திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நடைமுறை பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச நிபுணர்களின் ஆய்வுக்கு பின்பு உரிய மாற்றங்கள் செய்யப்பட்ட பின்பு அரசின் ஒப்புதலுடன் செப்டம்பர் மாதம் 3வது மாஸ்டர் பிளான் வெளியாகும். இந்த திட்ட வடிவமைப்புக்காக சுமார் 15 ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் அனைத்து தரப்பு மக்களுக்கான இணைப்பு, வருமான பங்கீடு, நில பயன்பாடு முறை, ப்ளூ - கிரீன் கட்டமைப்பு என பல விஷயங்கள் உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்து திட்டமிடப்பட்டு உள்ளது.

Advertisement

இதைவிட முக்கியமாக இந்த மாஸ்டர் பிளான் மூலம் சென்னையில் வான் அளவு உயரமான கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக சென்னையில் தற்போது பெரும்பாலான பகுதிகள் கிடைமட்ட அளவில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் நியூயார்க், லண்டன் போன்றவை செங்குத்து வளர்ச்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் FSI உயர உள்ளது.