தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு மத்தியிலான இணைப்பை மேம்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரம் குறையும், இதேபோல் வர்த்தகமும் அதிகரிக்கும். இதன் அடிப்படையில் தலைநகரான சென்னையில் இருந்து பல முக்கிய வர்த்தக பாதையை இணைக்கும் விதமாக எக்ஸ்பிரஸ்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு அடித்தப்படியாக சென்னை - திருச்சி மத்தியிலான எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் திட்டம் தயாராகியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்தியாவில் Manchester என அழைக்கப்படும் கோயம்புத்தூர் வர்த்தக அமைப்புகள் தமிழ்நாட்டு அரசிடம் சென்னை - கோவை மத்தியில் சேலம் வழியாக எக்ஸ்பிரஸ்வே அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
CII அமைப்பின் மூலம் கோயம்புத்தூர்-க்காக உருவாகப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான அமைப்பாக விளங்கும் CoimbatoreNXT, தமிழ்நாடு அரசிடம் சென்னை - கோவை மத்தியில் சேலம் வழியாக எக்ஸ்பிரஸ்வே அமைக்க கோரிக்கை வைத்துள்ளது. இவ்வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்படுவது மூலம் பயண நேரம் மட்டும் அல்லாமல் பயண தூரமும் குறையும் என தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை - கோவை மத்தியில் தினமும் 46000 பேர் பயணம் செய்து வருவதாகவும் புள்ளிவிபரத்தை CoimbatoreNXT அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதேபோல் தினமும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் விமானம் மூலம் பயணம் செய்ய துவங்கியிருக்கும் வேளையில் சென்னையில் இருந்து கோவைக்கான விமான சேவையையும் மேம்படுத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை - கோவை மத்தியில் எக்ஸ்பிரஸ்வே அமைத்தால் தற்போது இருக்கும் 520 கிலோமீட்டர், 9 மணிநேர பயணம்.. 450 கிலோமீட்டர், 6 மணிநேர பயணமாக குறையும். இதன் மூலம் வருடம் முழுவதும் 2 நகரங்களுக்கு மத்தியில் பயணிக்கும் 1.6 கோடி மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நிலையில் சென்னை - திருச்சி மத்தியிலான 300 கிலோமீட்டர் தூரத்தை கடக்க தற்போது குறைந்தது 5-6 மணிநேரம் ஆகும் நிலையில், இந்த பயண நேரத்தை வெறும் 3 மணிநேரமாக குறைக்கும் வகையில் பிரம்மாண்ட கிரீன்பீல்ட் எக்ஸ்பிரஸ்வே சாலையை அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை துறை துவங்கியுள்ளது.
More Articles
- லஞ்ச ஒழிப்பு துறை சோதனை எதிரொலி: சென்னையில் 7 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!
- அந்த மனசு தான் சார்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்..!!
- Parandur Airport: அப்பட்டமாக பொய் சொல்லும் நிர்மல்குமார்.. வீடியோ உடன் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
- இடம் உங்களோடது தான் ஆனா வீடு கட்ட முடியாது.. விழிபிதுங்கி நிற்கும் பள்ளிக்கரணை மக்கள்..!!
- சென்னையில் 1 லட்சம் பேர் பாதிப்பு.. ரூ.72,000 கோடி இழப்பு..!! பள்ளிக்கரணையில் என்ன தான் நடக்கிறது?
- போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!