சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பரந்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் அதற்கான பணிகள் நடந்த நிலையில் தற்போது விஜய் ஆட்சியில் பரந்தூர் விமான நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

Advertisement

தற்போது பரந்தூர் விமான நிலையம் வருமா , வராதா என்பது பெரிய கேள்வியாக நீடிக்கிறது. பரந்தூரில் விமான நிலையம் வரும் என நம்பி பலரும் அங்கே ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பல ஆயிரம் பிளாட்களை போட்டு விற்பனை செய்துள்ளன. இந்நிலையில் திடீரென திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அமைச்சர்கள் கூறியதால் இங்கே ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் மந்தமாகிவிட்டது.

Advertisement

ஏர்போர்ட் வராவிட்டால் முதலீடு அவ்வளவு தான் பல முதலீட்டாளர்களும் கவலையில் இருக்கும் நிலையில் சென்னை மெட்ரோ கழகம் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை திட்டமிடப்பட்ட 52.94 கி.மீ மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் கைவிடப்படவில்லை என சென்னை மெட்ரோ ரயில் கழகம் (CMRL) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது..! வணிகர்களின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

52.94 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ பாதை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ தூரத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூர் வரையிலான பகுதி, விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஏற்ப பின்னர் மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.

Advertisement

தற்போது பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் இடையிலான 14 மேம்பால நிலையங்களை கொண்ட 8,779 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகின்றனர். அனைத்து விரிவாக்க திட்டங்களிலும் மத்திய அரசு பாசிட்டிவாக பதில் தருவதாக சிஎம்ஆர்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PF பணம் எடுப்பவர்களுக்கு குட்நியூஸ்..!! விண்ணப்பத்தை நிராகரித்தால் அதிகாரிக்கு அபராதம்..!!

பரந்தூர் விமான நிலைய திட்டம் தாமதமானாலும், இந்த மெட்ரோ ரயில் பாதை அவசியமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில் பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் மண்டலங்களாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் இந்த பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவான போக்குவரத்து வசதியான மெட்ரோ சேவைகள் தேவைப்படுகின்றன.

Advertisement

அதுமட்டுமில்லாமல் இங்கே குத்தம்பாக்கம் பேருந்து முனையமும் வருவதால் இந்த மெட்ரோ பாதை இணைப்பை இன்னும் மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்து, ஆரம்பகட்ட பணிகளுக்காக 2,126 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது.

அந்த வகையில் முதலில் சுங்குவார்சத்திரம் வரையிலும் பின்னர் பரந்தூர் வரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அதாவது விமான நிலைய திட்டம் தொடர்பாக நிலவும் குழப்பங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை பாதிக்காது என்பதே அதிகாரிகள் கூறும் நல்ல செய்தி.