டெல்லி மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி, பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக 1 லட்சம் ரூபாய் வரையிலான ஊக்கதொகையை அளிக்க டெல்லி அரசு தயாராகியுள்ளது. இந்த ஒரு அறிவிப்பு புதிதாக கார் வாங்குவோர் மத்தியிலும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களில் தான் உள்ளது என்பது உறுதியான நிலையிலும், டெல்லி அரசு காற்று மாசுப்பாட்டை குறைக்கும் விதிமாக புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிமுகம் செய்துள்ளது, இந்த கொள்கை 2030 வரையில் இருக்கும் என்பதால் வாகனங்களை மாற்ற நினைக்கும் பலருக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
டெல்லி அரசு பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதை தாண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. டெல்லி அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையில் புதிதாக EV வாங்குவதற்கும், பழைய கார்களை ஸ்கிராப்-க்கு கொண்டு செல்வதை ஊக்குவிக்கவும் சலுகை அளிக்க உள்ளது. இக்கொள்கையின் முழுவிபரம் இப்போது பார்ப்போம்.
ஸ்கிராப்புக்கு கொண்டு டெல்லும் போது ஊக்கத்தொகை
1. புதிய கொள்கையின் படி பழைய பிஎஸ் 4 அல்லது அதற்கு முந்தை 4 சக்கர வாகனங்களை ஸ்கிராப்புக்கு கொடுத்துவிட்டு புது EV கார் வாங்குவோருக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது.
2. இதுவே பழைய இருசக்கர வாகனங்களை ஸ்கிராப்புக்கு கொண்டு சென்றால் 10000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. 3 சக்கர வாகனங்களுக்கு 25000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது.
புது வாகனம் வாங்கும் போது ஊக்கத்தொகை
1. எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்குவோருக்கு இந்த கொள்கையின் முதல் வருடத்தில் 30000 ரூபாய், 2வது வருடத்தில் 20000 ரூபாய், 3வது வருடத்தில் 10000 ரூபாய் அளிக்கப்படுகிறது.
2. இதேபோல் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் வாங்குவோருக்கு இந்த கொள்கையின் முதல் வருடத்தில் 50000 ரூபாய், 2வது வருடத்தில் 40000 ரூபாய், 3வது வருடத்தில் 30000 ரூபாய் அளிக்கப்படுகிறது.
3. N1 பிரிவு எலக்ட்ரிக் டிரக்குகளை வாங்குவோருக்கு 1 லட்சம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
4. இப்புதிய கொள்கையின் படி 30 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் அனைத்து எலக்ட்ரிக் 4 சக்கர வாகனங்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டு உள்ளது.
மற்ற மாநிலங்கள்
டெல்லி அரசின் இந்த மாபெரும் ஊக்கத்தொகை அடங்கிய EV கொள்கை கீழ் பலன் பெற ஜூலை 3ஆம் தேதி அறிமுகம் செய்த Delhi EV Subsidy Portal மூலம் அனைவரும் பலன் பெறலாம். இதை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் அடுத்த சில வாரத்தில் அல்லது மாதத்தில் புதிய கொள்கையை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- விஜய் அதிரடி முடிவு.. இனி தெருவுக்கு தெரு EV சார்ஜிங் ஸ்டேஷன்.. கர்நாடகா உடன் போட்டி!
- மாருதி சுசூகி-க்கு இப்படியொரு நிலைமை வந்துடுச்சே.. eVitara வாங்க போறீங்களா முதல்ல இதை படிங்க..!!
- 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 4,650% மல்டிபேக்கர் வருவாயை தந்த மின்சார வாகன பங்கு!!
- வந்தாச்சு டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்.. விலையை கேட்டா, வீட்டுக்கு ஒன்னு வாங்கலாம் போலியே..!!
- ஒலா முதலீட்டாளர்கள் கதறல்.. ஒரே நாளில் டமாலென விழுந்த பங்குகள்.. என்ன காரணம்..?
- ஹூவாய், சியோமி எல்லாம் வரும்போது நாங்க வர கூடாதா.. PS5 செட்அப் உடன் புது கார் - Sony Afeela