இந்தியாவில் தற்போது அமைப்பு ரீதியாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கலுக்கு தான் பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. அண்மை காலமாக கிக் தொழிலாளர்கள் எனப்படும் டெலிவரி வேலைகளில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல ஃப்ரீலேன்சிங் முறையில் வேலை செய்பவர்களும் அதிகமாகியுள்ளனர்.

Advertisement

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள் (Gig workers) மற்றும் சுயதொழில் செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு கைக்கு வரும் சம்பளத்தோடு சரி. எந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டமும் கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் EPFO அமைப்பு மூலம் ஒரு புதிய யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாம்.

Advertisement

இதுவரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ஓய்வூதிய மற்றும் சமூக பாதுகாப்பு பலன்களை, நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு மாற்றங்கள் வர இருக்கின்றன. குறிப்பாக டெலிவரி பார்ட்னர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்பவர்கள், முறைப்படுத்தப்படாத துறைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதன் மூலம் பலன் பெற உள்ளனர்.

PF ஓய்வூதிய தொகை ரூ.7,500ஆக உயர்கிறதா? மக்களவையில் மத்திய அரசு விளக்கம்..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படுவதால் நாட்டின் மிக முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு பொதுவான கணக்கு எண் வழங்கப்படும். இது தொழிலாளர்கள் தங்கள் வேலையை மாற்றினாலும் அல்லது வெவ்வேறு தளங்களில் பணிபுரிந்தாலும், அவர்களின் ஓய்வூதிய பலன்களை தொடர்ந்து பெற உதவும். அமைப்புசாரா மற்றும் சுயதொழில் செய்பவர்களின் வருமானம் நிலையானதாக இருக்காது என்பதால், அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் வசதிக்கேற்ப தொகையை பங்களிப்பு செய்யும், வசதி அளிக்கப்படும்.

Advertisement

தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், முதலாளிகள், அரசு மற்றும் கிக் நிறுவனங்கள் என பல தரப்பிலிருந்தும் நிதி பங்களிப்பு இருக்கும் வகையில் கொண்டு வர திட்டமிடப்படுகிறது. தற்போதைய EPFO விதிகளின்படி, 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பலன்கள் கட்டாயமாக உள்ளன. இதனால், பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு இது தான் தங்கம் விலை..!! அடித்து சொல்லும் நிபுணர்கள்..!!

EPFO 3.0 திட்டத்தின் கீழ் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆலோசனை நடக்கிறது. இந்த திட்டத்தில் கிக் ஊழியர்களே தங்களின் பணி ஓய்வு காலத்திற்கான ஓய்வூதிய தொகை, மாதாந்திர பங்களிப்புகளை முடிவு செய்யலாம் என சொல்லப்படுகிறது.இந்த திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்றாலும், இது செயல்படுத்துப்படும்போது, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நீண்டகால பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும். குறிப்பாக அமைப்பு சாரா மற்றும் கிக் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.