EPFO உறுப்பினர்கள் தங்கள் PF தொகையை UPI பேமெண்ட் கேட்வே மூலம் எளிதாக எடுக்கும் அம்சத்தின் சோதனை பணிகள் முடிவடைந்துவிட்டதாக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Advertisement

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்களின் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் தகுதியான தொகையை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதியின் சோதனை முறை முடிந்துவிட்ட நிலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது அமைச்சர் கூறுகையில் "உறுப்பினர்கள் தங்கள் EPF தொகையை UPI வழியாக எடுக்கும் வசதியின் சோதனை முடிந்தது. பிஎப் கணக்கின் உரிமையாளர்கள் வித்டிரா செய்யக்கூடிய தகுதியான தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்" என்று அவர் கூறினார். இந்த புதிய முறை மூலம் பணம் எடுக்கும் நேரம் வாரக்கணக்கில் இருந்து நொடிகளாக குறையும் எனவும் தெரிவித்தார்.

EPFO 3.0 எப்படி செயல்படும்?

UMANG செயலியில் பிஎப் கணக்கின் உறுப்பினர்கள் தங்களுடைய இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு எவ்வளவு தொகை நேரடியாக மாற்றலாம் என்பதை சரிபார்க்க வேண்டும். குறித்த தொகையை வித்டிரா செய்ய உறுதி அளிக்கப்பட்ட உடன் UPI மூலம் பணம் பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வரும்.

Advertisement

வழக்கம் போல் EPFO தளத்தில் இருக்கும் மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்கு பணம் வித்டரா செய்யும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தொகை எடுக்கலாம்?

மொத்த PF இருப்பில் 25 சதவீதம் எப்போதும் ஓய்வூதியத்துக்காக லாக் செய்யப்பட்டு இருக்கும். மீதமுள்ள 50 முதல் 75 சதவீதம் வரை தகுதியான தொகையை மட்டுமே UPI அல்லது ATM வழியாக எடுக்க முடியும். இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் காரணத்திற்காக எவ்வளவு தொகை வித்டிரா செய்ய முடியும் என்பதை செயலியில் தெளிவாகக் காட்டப்படும்.

Advertisement

தற்போது PF பணம் எடுக்க பல ஆவணங்கள், முதலாளி ஒப்புதல் போன்ற சிக்கல்கள் உள்ளன. EPFO 3.0 இந்த அனைத்து சிரமங்களையும் தீர்த்து, டிஜிட்டல் முறையில் பணக்கை திரும்ப பெற உதவுகிறது.