சென்னையின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறைக்கு மேலும் ஒரு மகுடமாக தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ்கான் ஒரகடத்தில் 15000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் டிஸ்ப்ளே மாடியூல் தொழிற்சாலை கட்டுமான பணி கடைசி கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில், விரைவில் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, இதுநாள் வரையில் தமிழ்நாடு ஒரு ஐபோன் அசம்பிளி நகரமாக இருந்தது, தற்போது முழு உதிரிபாக தொழிற்சாலை நகரமாக மாறுகிறது. இப்புதிய தொழிற்சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கான டிஸ்பிளே மாடியூல் தயாரிக்க உள்ளது. இதேதொழிற்சாலை பாக்ஸ்கான் நேரடியாக இயக்காமல் அதன் கிளை நிறுவனமான யூசான் டெக்னாலஜி நிறுவனம் இயக்குகிறது.
ஒரகடத்தில் இத்தொழிற்சாலையை 13180 முதல் 15000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட உள்ள நிலையில், இத்தொழிற்சாலையில் சுமார் 14000 பேர் பணியாற்ற உள்ளனர். இத்தொழிற்சாலையில் உயர் தர இன்ஜினியரிங் மற்றும் டெக்னிக்கல் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
மேலும் இந்த தொழிற்சாலை தற்போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் அசம்பிளி ஆலைக்கு அருகில் இருக்கும் ESR ஒரகடம் இண்டஸ்ட்ரியல் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் பார்கில் சுமார் 50000 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இது தான் இந்தியாவின் முதல் ஐபோனுக்கான டிஸ்பிளே தொழிற்சாலையா இருக்கும்.
இத்தொழிற்சாலை பிரத்தியேகமாக ஐபோனுக்கான டிஸ்பிளே தொழிற்சாலையாக இருக்கும் காரணத்தால் இங்கிருந்து பாக்ஸ்கான் மட்டும் அல்லாமல் சென்னையில் இருக்கும் பெகார்டான், ஓசூரில் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கும் சப்ளை செய்ய உள்ளது.
இதன் மூலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் குறையும், அதேபோல் உள்ளூர் உற்பத்தியும் அதிகரிக்கும். இதன் படிப்படியான வளர்ச்சியின் மூலம் முழு ஐபோனும் மேக் இன் இந்தியாவாகும் நிலை வெகு தொலைவில் இல்லை என தெரிகிறது.
இப்புதிய ஒரகட தொழிற்சாலையின் அசம்பிளி லைனின் ஏஐ தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் பழுது ஏற்படும் வாய்ப்பு பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் குழுமத்தின் எகோசிஸ்டம் தமிழ்நாட்டில் வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்நிறுவனத்திற்கென தனி குழு தமிழ்நாடு அரசின் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மூலம் பாக்ஸ்கான் உற்பத்தி விரிவாக்கம் மேம்பாடுக்கான பணிகள் அதிவிரைவாக செய்து முடிக்கும் செட்அப்-ஐ உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னையில் முக்கிய உற்பத்தி பகுதியாக இருக்கும் ஓரகடம் சுமார் 7000 ஏக்கர் அளவில் இருக்கும் காரணத்தால் இப்பகுதியில் விரைவான சரக்கு போக்குவரத்திற்காக அனைத்த ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் எலக்ட்ரானிக்ஸ், ஈவி, கம்பியூட்டர் தயாரிப்பு போன்ற புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய திட்டமிடும் அனைத்து தரப்பினருக்கும் ஓரகடம் முக்கியமான தேர்வாக விளங்கி வருகிறது.
More Articles
- லஞ்ச ஒழிப்பு துறை சோதனை எதிரொலி: சென்னையில் 7 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!
- அந்த மனசு தான் சார்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்..!!
- Parandur Airport: அப்பட்டமாக பொய் சொல்லும் நிர்மல்குமார்.. வீடியோ உடன் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
- இடம் உங்களோடது தான் ஆனா வீடு கட்ட முடியாது.. விழிபிதுங்கி நிற்கும் பள்ளிக்கரணை மக்கள்..!!
- சென்னையில் 1 லட்சம் பேர் பாதிப்பு.. ரூ.72,000 கோடி இழப்பு..!! பள்ளிக்கரணையில் என்ன தான் நடக்கிறது?
- போரூர் + செங்கல்பட்டு.. லட்டு மாதிரி வந்த ரூ.1000 கோடி.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய விஷயம்!