இன்றெல்லாம் பலர் 9 டூ 5 ஜாப் செல்வதை விட வீட்டில் இருந்தபடியே ஃப்ரீலான்சிங் செய்து சம்பாதிக்கின்றனர். இப்படி நிறுவங்களுக்கு வெளியில் இருந்து வேலை செய்யும் கிக் கலாச்சாரம் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. இவர்களுக்கும் மாத சம்பளக்காரர்களைப் போலவே அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.

Advertisement

ஃப்ரீலான்சிங் மூலம் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி உண்டா? அப்படி இருந்தால் எப்படி வரி செலுத்த வேண்டும்? இதை சம்பளம் என்று கணக்கில் கொள்ளலாமா? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு வரும். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

மிஹிர் தன்னா என்ற வரி நிபுணரின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு கம்பெனியில் சேர்ந்து 9 முதல் 6 மணி வரை வேலை செய்கிறார். அவருக்கு ஒரு பாஸ் இருப்பார். அதேபோல மாதா மாதம் சம்பளமும் கைக்கு வந்துவிடும். இதை சம்பள வருமானமாகவே வருமானவரித்துறை கருதும்.

8-வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்! அட அடிப்படை சம்பளமே ரூ.46,660-ஆ! இது சூப்பரான விஷயமாச்சே!

அதுவே எந்த ஒரு பணி நேரமும் இன்றி ஒரு நபர் பல நிறுவனங்களுக்காக வேலை செய்து வருமானம் பார்க்கிறார். ஒரே நேரத்தில் 3 முதல் 4 நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார். எப்போது வேலை செய்ய வேண்டும்? எவ்வளவு வேலை செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் அவரே முடிவு செய்கிறார் என்றால் அது ஃப்ரீலான்சிங் வருமானமாக கருதப்படும். ஏனெனில் அவருக்கு கிடைக்கும் வருமானம் அந்த மாதத்தில் அவர் செய்யும் வேலையை பொறுத்தது.

Advertisement

ஒரு மாதத்தில் அதிக வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும். இல்லை என்றால் வருமானம் இருக்காது.எனவே ஃப்ரீலான்சர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் தங்களுடைய ஆண்டு வருமானம் ரூ.75 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய வருமானத்தில் 50 சதவீதம் வரையிலான தொகைக்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதுவே ஆண்டு வருமானம் ரூ.3 கோடி வரை இருந்தால் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.

மற்றொரு வரி நிபுணரான நிஷாந்த் ஷங்கர் கூறுகையில், பல பிரீலான்ஸர்கள் தங்களுடைய வருமானத்தை தொழில் வருமானமாக கணக்கு காட்டுகின்றனர். ஆனால் எல்லா ஃபிரீலான்ஸர்களும் இதை செய்யக்கூடாது. உங்களுடைய வருமானம் எந்த கணக்கில் வரும் என்பதை தீர்மானிக்க 3 விஷயங்களை கவனிக்க வேண்டும்.

Advertisement

உங்கள் வேலையின் தன்மை என்ன?, குறிப்பிட்ட நேர காலமின்றி நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக வேலை செய்கிறீர்கள்?, உங்களுக்கும், உங்களுக்கு வேலை கொடுத்த நிறுவனத்திற்கும் இடையே இருக்கும் ஒப்பந்தம் என்ன சொல்கிறது? என்பதை எல்லாம் பொருத்துதான் வருமான வரி செலுத்த வேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஃப்ரீலான்சிங் வேலை செய்தால் அது சுய தொழில் வருமானத்தின் கீழ் வரும். அதுவே ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்தால் அது சம்பளம் வருமானமாக கணக்கில் கொள்ளப்படும்.

சில ஃபிரீலான்ஸர்கள் வருமானத்தை குறைத்து காட்டுவது, டிடிஎஸ் விவரங்களை கவனிக்காமல் விட்டுவிடுவது, வரியை குறைப்பதற்காக செலவுகளை கணக்கில் காட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்கின்றனர். இதனால் நோட்டீஸ் வருவதற்கு வாய்ப்புண்டு.

Advertisement

ஃபிரீலான்ஸர்கள் கம்பெனி பிடித்தம் செய்த டிடிஎஸ், அரசின் 26 ஏஎஸ் மற்றும் ஆனுவல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் போன்ற ஆவணங்களில் பதிவாகி இருக்கும் தொகை ஆகியவற்றையெல்லாம் வரிக் கணக்குடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதேபோல சொந்த செலவுகளை எல்லாம் கணக்கில் காட்டி வரியை குறைக்க கூடாது.

வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நீங்கள் செலுத்திய பில்கள் போன்றவை அரசின் ஆனுவல் இன்ஃபர்மேஷன் சிஸ்டமில் சரியாக இருக்கிறதா? என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வருமானம் மற்றும் செலவுகளை கணக்கில் காண்பிக்க சரியான சான்றுகளை வைத்திருக்க வேண்டும். ஃப்ரீ லான்சிங் வருமானம் பெறுபவர்கள் சரியான படிவத்தைத் தேர்ந்தெடுத்து வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

Advertisement

ஸ்விக்கி, சொமேட்டோ ஓட்டுநர்கள், ஃப்ரீலான்சர்கள் மற்றும் பிற கிக் தொழிலாளர்கள் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர் என்றால் வருமான வரி சட்டம் 44ADA-வின் கீழ் அரசு 50% வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு வழங்குகிறது. அப்படியானால் 5 லட்சத்தில் பாதி 2,50,000 புதிய வரிமுறையின் கீழ் ரூ. 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. எனவே இவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. இருந்தாலும் நிறுவனங்கள் பிடித்தம் செய்துள்ள டிடிஎஸ் தொகையை பெறுவதற்கு தகுந்த படிவத்தை நிரப்பி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.