ஒவ்வொரு வருடமும் இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓக்களில் அதிக சம்பளம் வாங்கும் நபர் யார் என்ற போட்டி தொடர்ந்து இருந்து வருகிறது, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார்.
2026ஆம் நிதியாண்டுக்கான சம்பள விபரத்தை ஹெச்சிஎல் வெளியிட்ட நிலையில், இந்த நிதியாண்டில் சம்பளம், பங்குகள், போனஸ் என அனைத்தையும் சேர்த்து ஒரு நாளுக்கு 48.49 லட்சம் ரூபாய் அடிப்படையில் வருடத்திற்கு 177 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதை ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் 14.75 கோடி ரூபாய், ஒரு மணிநேரத்திற்கு 2.02 லட்சம் ரூபாய், ஒரு நிமிடத்திற்கு 3,367 ரூபாயாகும்.
ஹெச்சிஎல் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் படி சி.விஜயகுமார் 2026ஆம் நிதியாண்டுக்கு 18.3 மில்லியன் டாலர் சம்பளத்தை பெற்றுள்ளாற், இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 67 சதவீதம் அதிகமாகும்.
இதை விட முக்கியமாக இன்போசிஸ் சிஇஓ காட்டிலும் 2 மடங்களும், டிசிஎஸ் சிஇஓ காட்டிலும் 6 மடங்கும், விப்ரோ சிஇஓ காட்டிலும் 3.5 மடங்கும் அதிகமாகும். இந்தியாவின் 315 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை துறையில் கடந்த 20 வருடமாக பிரஷ்ஷர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் அப்படியே இருக்கும் வேளையில் சிஇஓக்களின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருவது வியக்கும் விஷயமாக உள்ளது.
பொதுவாக சிஇஓக்களின் சம்பளம் அதன் நிர்வாகம் வைக்கும் முக்கிய இலக்குகளை அடைந்தால் மட்டுமே போனஸ், கொடுப்பனவு, பங்குகள் என கொடுக்கும் அதன் அடிப்படையில் தான் சம்பளம் உயர்கிறது.
அப்படி பார்த்தால் 2026ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் சம்பளம் வெறும் 2.5 சதவீதம் உயர்ந்து 82.5 கோடி ரூபாயாகவும், டிசிஎஸ் கிருதிவாசன் சம்பளம் 6.3 சதவீதம் அதிகரித்து 28 கோடி ரூபாயாகவும், விப்ரோ சிஇஓ ஸ்ரீனி பலியாவின் சம்பளம் 14.5 சதவீதம் உயர்ந்து 49.2 கோடி ரூபாயாக உள்ளது.
ஆனால் ஹெச்சிஎல் விஜயகுமார் அடிப்படை சம்பளம் 2.4 மில்லியன் டாலர், ஃப்ர்பாமென்ஸ் போனஸ் 2 மில்லியன் டாலர், நீண்ட கால கொடுப்பனவு 3.9 மில்லியன் டாலர், அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்தது மூலம் 9.4 மில்லியன் டாலர், இதர சலுகைகள் பிரிவில் 0.3 மில்லியன் டாலர் என 67 சதவீத சம்பள உயர்வில் மொததம் 18.3 மில்லியன் டாலர் அல்லது 177 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார்.
ஹெச்சிஎல் நிறுவனத்தில் தக்போது 227000 ஊழியர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும், அதன் கிளை மற்றும் துணை நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சம்பளத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது விஜயகுமாரின் மீடியன் சம்பளம் 291.9 மடங்கு அதிகமாகும்.
இதேவேளையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் நிலையான நாணய மதிப்பில் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது, டாலர் அடிப்படையில் 6 சகவீதம் அதிகரித்து 14.6 பில்லியன் டாலராக உள்ளது.
More Articles
- என்ன தல.. ரூட்டை மாத்திட்டீங்க போலியே.. 17 லட்சம் கோடி போர்ட்ஃபோலியோ.. LIC-யின் ஐடி பங்கு முதலீடு உயர்வு..!!
- மதுரை இளைஞர்களுக்கு குட்நியூஸ் சொன்ன HCL..!! தூங்கா நகரத்தில் இனி ஐடி வேலைக்கு பஞ்சமிருக்காது..!!
- ரத்த வெள்ளத்தில் இந்திய ஐடி நிறுவன பங்குகள்.. அமெரிக்காவில் விழுந்த அடி, பெங்களூர், சென்னையில் எதிரொலி..!!
- ஏஐ தொழில்நுட்பம் செய்யப்போகும் மேஜிக்.. இந்திய ஐடி துறையை நம்பினோர் கைவிடப்படார்..!
- டிசிஎஸ் தான் இப்படின்னா.. ஹெச்சிஎல்-ம் இதே லிஸ்டில் விருகிறதே..!!
- HCL நிறுவன ஊழியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.. பண மழை கொட்டப் போகுது.. சம்பள உயர்வு அறிவிப்பு..!!