துபாய்: யெமன் நாட்டின் கிளச்சியாளர்கள் படையான ஹவுதிக்கள் இன்று காலை 5 மணியளவில் துபாயின் முக்கிய தொழிற்துறை பகுதியான ஜெமல் அலி பகுதியில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் இப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
சுமார் 20 நிமிடம் நடந்த தாக்குதல் மூலம் ஜெமல் அலி தொழிற்துறை பகுதி, ஜெமல் துறைமுகம் அருகில் உள்ள பகுதிகள் என அனைத்தும் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. ஹவுதி படைகளின் தாக்குதல் காரணமாக ஜெமல் அலி துறைமுகத்தில் இருக்கும் கிடங்குகள், எரிபொருள் சேமிப்பு மற்றும் போக்குவர்த்து கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில், துபாயில் இருக்கும் அமெரிக்க கட்டமைப்புகள் மீது முன்பு ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது ஹவுதி படைகள் தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.
இன்று காலையில் 5-5.10 மணிக்கு துவங்கிய 20 நிமிட தாக்குதலில் சுமார் 7 முறை ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தினர், இத்தாக்குதல் மூலம் ஜெமல் அலி பகுதியில் கரும் புகைமூட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் துபாய் அரசு சார்பில் வெளியிடவில்லை.
மேலும் இந்த தாக்குதலை நடந்ததை வீடியோ எடுத்ததிற்காக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தாக்குதல் மூலம் ஏற்பட்ட அதிர்வுகளை Al Furjan பகுதியில் இருக்கும் மக்கள் அதிகாலையில் உணர்ந்ததாக AOL news-க்கு தெரிவித்துள்ளனர்.
ஜெமல் அலி என்பது துபாயின் மைய பகுதியில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் இருக்கும் ஒரு முக்கிய வர்த்தக பகுதியாகும், இதே பகுதியில் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிலத்தில் கட்டமைக்கப்பட்ட துறைமுகம் உள்ளது. மேலும் இது துபாய் மக்களுக்கு முக்கியமான ஷாப்பிங் பகுதி உள்ளது, இப்பகுதியில் தான் ஃப்ரீ டிரேட் சோன் உள்ளது. இந்த தாக்குதலால் துபாய் மற்றும் UAE-யில் பிற நாடுகளும் உயர் எச்சரிக்கை நிலைக்கு சென்றுள்ளது.
மறுமுனையில் ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக திறப்பதற்காக ஓமான் ஈரான் உடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஈரானுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடப்பதை அமெரிக்க அரசு செயலாளரான மார்கோ ரூபியோ உறுதி செய்துள்ளார். மேலும் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் இன்று அல்லது நாளை ஈரானுடன் ஒப்புந்தம் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் யெமன் நாட்டின் அருகில் இருக்கும் செங்கடலில் இந்திய வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 இந்தியர்களும் பத்திரமாக யெமன் நாட்டின் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
More Articles
- துபாயில் புது பிஸ்னஸ்..!! தென்னிந்தியாவை மையமாக வைத்து நடிகர் மாதவன் போடும் கணக்கு..!!
- துபாயில் இருந்து தங்கத்தை இந்த வடிவில் கொண்டு வந்தால் வரி கட்டாயம்..!! NRI மக்களே நோட் பண்ணுங்க!!
- 3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு
- துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?
- துபாய் விமான நிலையம் திடீர் மூடல்.. கேரள விமான நிலையத்தில் பரபரப்பு..!!