பெங்களூரில் தினமும் ஒரு புதுமை என்ற வகையில், பெங்களூர்வாசி ஒருவரின் புலம்பல் தான் இன்று இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் இத்துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் அதிகப்படியமான சம்பளம் காரணமாக ஒட்டுமொத்தமாகவே இந்நகரில் செலவுகள் அதிகமாக இருந்து வருகிறது.
இதில் முக்கியமாக ரியல் எஸ்டேட், பெங்களூரில் தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கும் 3BHK அப்பார்ட்மென்ட் வீடுகளின் ஆரம்ப விலை 1.5 கோடி ரூபாயில் துவங்கி 2.5 கோடி - 6 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கிறது.
ஆனாலும் ஒவ்வொரு அப்போர்ட்மென்ட் வீடுகளும் புக்கிங் திறக்கப்பட்ட ஒரு சில வாரத்தில் மொத்தமாக விற்கப்பட்டு விடுகிறது. சமீபத்தில் அப்பார்ட்மென்ட் கட்டிடம் சாய்வதால் இடிக்க உத்தரவிட்ட அப்பர்ட்மென்ட் வீடுகள் வரையில் அனைத்தும் விற்கப்பட்டு உள்ளது.
ஆனால் பெங்களூர் டெக் துறையில் பணிநீக்கம், ஏஐ தொழில்நுட்பத்தால் நிரந்தரமில்லா வேலை, என பல பிரச்சனைகள் இருப்பதற்கு மத்தியில் எப்படி மக்கள் இத்தகைய காஸ்ட்லியான வீடுகளை வாங்குகிறார்..?
35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா?
எப்படி பெங்களூர் மக்களிடம் இவ்வளவு காசு இருக்கிறது என ரெட்டிட் தளத்தில் கேட்கப்பட்ட கேள்வி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Bangalore Real Estates என்ற ரெட்டிட் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்வியில், பெங்களூரில் இருக்கும் மக்கள் எப்படி 2.5-6 கோடி மதிப்புள்ள வீடுகளை வாங்குகிறார்கள்..? பெரிய அளவில் டவுன்பேமெண்ட் செலுத்தினாலும் மாதம் ஈஎம்ஐ எளிதாக 1-1.5 லட்சம் ரூபாய் வரையில் வரும், இப்படி என்றால் இந்த வீடுகளை வாங்கும் மக்கள் மாதம் 3-5 லட்சம் வரையில் சம்பாதிக்கின்றார்களா..?
ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!
பணிநீக்கம், ஏஐ அச்சம் மத்தியில் பெங்களூரில் இருப்போர் எப்படி 20-25 வருடம் வரையிலான கடனுக்குள் இவர்களால் செல்ல முடிகிறது..? இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன..? எல்லோரின் வீட்டிலும் Double income இருப்பதா அல்லது குடும்பத்தின் சொத்து அல்லது பழைய சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கும் பணத்தின் வாயிலாக வாங்குகிறார்களா..? என கேள்விகளை அடுக்கியுள்ளார் அந்த நபர்.
இதற்கு பலரும் பல விதிமான பதில்களை அளித்துள்ளனர், இதில் ஒரு சிலர் பதில்கள் மிரளவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெங்களூரில் 15 வருடம் பணியாற்றியர்களின் பவர் தெரியம நீங்க பேசுறீங்க என்று ஒருவரும், மற்றொருவர் பெங்களூரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் வீடுகள் பெரும்பாலும் ஹோம் லோன் இல்லாமல் தான் வாங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
3வது நபர் பல ஐடி ஊழியர்கள் ஆடம்பர வீடுகளை வாங்குவதற்காக 10-15 வருடமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்த லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து அந்த தொகையை வைத்து வாங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
உங்களூடைய நண்பர்கள், உறவினர்கள் யாரேனும், சமீபத்தில் பெங்களூரில் காஸ்ட்லியான வீட்டை வாங்கியிருக்கிறார்களா..? பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More Articles
- பெங்களூரில் அதிர்ச்சி.. 18 மாடி கட்டிடம்.. அப்படியே சாயுது.. இடிக்க சொல்லி உத்தரவு!
- குப்பைகளை அகற்றாவிட்டால் கூடுதல் வரி.. வீட்டு உரிமையாளர்களுக்கு செக் வைத்த மாநகராட்சி..!!
- பெங்களூருக்கு என்னாச்சு.. 31 கிமீ செல்ல 2.5 மணிநேரமா.. இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஷாக் பதிவு!
- டிகே சிவகுமார் ஆட்சியின் முதல் 30 நாட்கள்.. அறிவிப்புகள் பலே.. ஆனா ஒரு பிரச்சனை!
- பெங்களூர் கேப்ஜெமினி.. குழந்தைகளை வாஷிங் மெஷினில் அடைத்து கொடுமை.. பதை பதைக்க வைக்கும் வீடியோ..!
- சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டம்: தொடக்கப்புள்ளி வச்சாச்சு..!! விரைவில் பணிகள் தொடக்கம்..!!