எங்கங்கோ சிதறிக் கிடக்கும் சொந்தங்கள் திருமணம், விசேஷங்கள் அல்லது வெளியூர் பயணம் என்றால் சட்டென ஒன்று கூடிவிடும். ரொட்டீன் வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்காமல் அப்போதாவது அனைவரிடமும் சேர்ந்து பேசி நாட்களை கழிக்கலாம் என்று என்னுபவர்களுக்காகவே இந்திய ரயில்வே ஒரு சிறப்பான விஷயத்தை செய்திருக்கிறது. இனி குடும்பத்துடன் வெளியூர் செல்ல அனைவருக்கும் ஒன்றாக சீட் கிடைக்கும்.

Advertisement

ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே பெட்டியில் பயணிப்பதற்கு இந்திய ரயில்வே ஏற்பாடுகளை செய்திருக்கிறது. திருமணம், வீட்டு விசேஷங்கள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், சுற்றுலா என எதுவாக இருந்தாலும் சரி அனைவரும் ஒரே பெட்டியில் செல்லலாம். இதற்கு இந்திய ரயில்வே ஃபுல் டாரிஃப் ரேட் (Full Tariff Rate) ஸ்கீம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Advertisement

இனி குடும்பங்கள் ஒரு முழு பெட்டியையோ அல்லது முழு ட்ரெயினையோ முன்பதிவு செய்து பயணிக்கலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் முன்பதிவு செய்ய முடியும்.

எப்போது முன்பதிவு செய்ய வேண்டும்?: பயணம் செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து முன்பதிவு செய்ய தொடங்கலாம். ஆனால் குறைந்தபட்சமாக 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்ய வேண்டும்.

தற்போது இந்த வசதி வெஸ்டர்ன் ரயில்வே கீழ் உள்ள ஸ்டேஷன்ககளுக்கு மட்டுமே கிடைக்கிறது. சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் பிற ஸ்டேஷன்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

Advertisement

எப்படி விண்ணப்பிப்பது?: ஐஆர்சிடிசி-யின் எஃப்டிஆர் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதைவிட வசதியாக முன்பதிவு செய்ய, ஸ்டேஷன் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு வழங்கி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பயண விபரங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். பின்னர் ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற விவரமும் திரையில் தோன்றும். அந்தத் தொகையை நீங்கள் விண்ணப்பித்த 6 நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும். பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் ரத்தாகிவிடும்.

மீண்டும் புதிதாக தான் விண்ணப்பித்து பயணிக்க வேண்டும். ஆஃப்லைனில் விண்ணப்பித்தால் ஸ்டேஷன் அதிகாரிகளிடம் கோரிக்கை வழங்கி அவர்கள் உங்களுடைய விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பரை வழங்குவார்கள். பிறகு அங்குள்ள கவுண்டரில் பணம் செலுத்தி பெட்டியை உறுதி செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 10 போட்டிகள் வரையில் முன்பதிவு செய்ய முடியும். முழு ட்ரெயினையும் முன் பதிவு செய்ய விரும்புபவர்களும் கோரிக்கை மனு வழங்கி விண்ணப்பிக்கலாம்.

Advertisement

எவ்வளவு கட்டணம்?: 7 நாட்கள் வரை பயணம் செய்ய ஒரு பெட்டிக்கு ரூ.50,000 வசூலிக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் பயணம் செய்ததால் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் ரூ.10,000 கட்டணம் விதிக்கப்படும். முழு ட்ரெயினையும் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் பதிவு கட்டணமாக ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும். அதாவது 18 பெட்டிகளுக்கு தொகை கணக்கிடப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கும் அதிகமாக முழு ட்ரெயினுக்கும் முன்பதிவு செய்திருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

முன்பதிவு செய்தவர் பணம் தராத காரணத்தாலோ அல்லது ரயில்வே நிர்வாகத்தாலோ நீங்கள் முன்பதிவு செய்த கோச் ரத்து செய்யப்பட்டால் அங்குள்ள சீஃப் கமர்சியல் மேனேஜர் மூலமாக பணத்தை ரீபண்ட் பெறலாம். திருமணம், ஆன்மீக பயணம், கல்வி சுற்றுலா கார்ப்பரேட் நிகழ்வுகள் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் தாராளமாக ட்ரெயின் பெட்டியை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.