ஈரான் போர், ஏஐ முதலீடுகள் என பல காரணங்களுக்கு மத்தியில் இந்தியாவில் அன்னிய செலவாணி இருப்பு தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் ஆர்பிஐ ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டாலும், சந்தையில் இருக்கும் முதலீட்டை வெளியேற்றத்தை தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் டாலர் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசும், ஆர்பிஐ இணைந்து வெளிநாட்டில் இருக்கும் NRI-கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து டாலர் முதலீடுகளை ஈர்க்க FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்தது.
இதன் அடிப்படையில் ஆர்பிஐ இந்திய வங்கிகளுக்கு FCNR வைப்பு நிதியின் மீது இருக்கும் கரன்சி ரிஸ்க்-ஐ தவிர்க்கும் வகையில் புதிய சலுகை கொடுத்தது. இதன் விளைவாக FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதம் வரையில் அதிகரித்தது.
இதன் விளைவாக உலகில் பல நாடுகளில் இருந்து டாலர் முதலீடுகள் குவிய துவங்கியது, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2013ல் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் பெற்ற மொத்த டாலர் முதலீட்டை வெறும் 45 நாட்களில் இந்தியா தற்போது பெற்றுள்ளது.
மத்திய அரசும், ஆர்பிஐயும் FCNR வைப்பு நிதியின் கீழ் 80-85 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு இருக்கும் வேளையில் கடந்த 45 நாட்களில் 17.4 பில்லியன் டாலர் பெறப்பட்டு உள்ளது.
Modi மெகா அறிவிப்பு: தேர்வு முறையில் சீர்திருத்தம்.. Infosys நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு!
ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜூலை 17 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா மொத்தம் 20.7 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது, இதில் FCNR வைப்பு நிதி வாயிலாக மட்டுமே 17.4 பில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளது. 2013 திட்டத்தின் வாயிலாக எப்சிஎன்ஆர் வைப்பு நிதி திட்டத்தின் வாயிலாக சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் இந்த சிறப்பு வட்டி விகிதம் திட்டம் ஜூன் 8 முதல் செப்டம்பர் 30 வரையில் மட்டுமே இருக்கும் என்பதால் இக்காலக்கட்டத்தில் 65-70 பில்லியன் டாலர் வரையிலான தொகையை பெறும் என எஸ்பிஐ ரிசர்ச் நவ் கணித்துள்ளது. இதேபோல் OFCB மற்றும் ECB வாயிலாக மொத்தம் 80-85 பில்லியன் டாலர் வரையிலான தொகையை பெறக்கூடும் என அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு ரூ.1.38 லட்சம் கோடி பணத்தை அனுப்பிய இந்தியா.. அதுவும் 3 மாதத்தில்.. எதற்காக தெரியுமா?
மேலும் FCNR வைப்பு நிதி திட்டத்தை பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள் தான் பெரிய அளவில் செயல்படுத்தி ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ ரிசர்ச் நவ் வெளியிட்ட அறிவிப்பில் ஆர்பிஐ தற்போது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதே நிதர்சனமாக உண்மை எனவும் தெரிவித்துள்ளது.
More Articles
- டாலருக்கு எண்டு கார்டு போடும் மோடி.. ஜப்பான் உடன் நடக்கும் முக்கியமான டீல்!
- பெட்ரோல், டீசல் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்..!!
- அமெரிக்க டாலருக்கு முடிவு கட்டும் சீனா: ஈரான் போரை வைத்து டிரம்புக்கு மறைமுக செக் வைத்த ஸீ ஜின் பிங்
- இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?
- 50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!
- வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது இந்திய ரூபாய் மதிப்பு!! ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு புது சிக்கல்!!