இன்றெல்லாம் வங்கிகள் கூவி கூவி கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. ஒருபுறம் கிரெடிட் கார்டுகளை அதிகளவில் பயன்படுத்தி பொருட்களை வாங்கிவிட்டு கட்டமுடியுமால் தவிக்கும் மக்கள் மத்தியில், பலர் பக்குவமாக பயன்படுத்தி அதன் நன்மைகளை சரியாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மறுபுறம் கிரெடிட் கார்டுக்கு வசூலிக்கப்படும் 42 சதவீதம் வரையிலான வட்டி ஒரு சிலரை கிரெடிட் கார்டு வாங்கவே யோசிக்க வைக்கிறது.

Advertisement

இப்படி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் கிரெடிட் கார்டு சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ட்ரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் சமீபத்தில் கிரெடிட் கார்டு தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பெற தகுதி உள்ள 4 நபர்களில் ஒருவர் மட்டுமே கிரெடிட் கார்டு பெறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கிரெடிட் கார்டு பெறுபவர்கள் குறித்த சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்தியாவில் சுமார் 25 கோடி நபர்கள் கிரெடிட் கார்டு பெற தகுதியுடையவராக இருக்கின்றனர். ஆனால் இதுவரையில் 5.2 கோடி பேர் மட்டுமே கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு குறைந்து வருகிறது.

கொலம்பியாவில் 62 சதவீதத்தினர், UK-வில்70 சதவீதத்தினர், USA-வில் 81 சதவீதத்தினர், ஹாங்காங்கில் 98 சதவீதத்தினர் கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் வெறும் 25% ஆக மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கிரெடிட் கார்டு பெறுபவர்களின் விவரங்கள் வெளியாகும்.

Advertisement

அதன்படி கடந்த ஆண்டில் 26 சதவீதத்தினர் கிரெடிட் கார்டு பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இந்த விகிதம் 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. ஒரு காலத்தில் லோன் என்று சொன்னாலே கிரெடிட் கார்டுகள் தான் முன்னிலை வகித்தது. ஏனென்றால் இதற்கு பிணயமாக எதையும் வழங்க தேவையில்லை. ஆனால் இன்று யுபிஐ தளங்கள் மூலமாகவே கடன் கிடைக்கிறது. அதோடு தனிநபர் கடன்களும் அதிகரித்துவிட்டது.

இந்த குறைவுக்கு காரணம் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு தற்போது 2 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதோடு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரூபே கார்டுகளை மட்டும்தான் யுபிஐ ஆப்களில் இணைத்து பயன்படுத்த முடியும். மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட் போன்ற இதர கார்டுகளுக்கு இந்த வசதி இன்னும் வழங்கப்படவில்லை.

Advertisement

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது வரையில் கிரெடிட் கார்டு கடன்களுக்கான அவுட் ஸ்டாண்டிங் ரூ.3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கார்டு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கையும் 5.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 1.4 கோடியாக இருந்தது.

புதிதாக கிரெடிட் கார்ட் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர ஏற்கனவே கிரெடிட் கார்டை பெற்று பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் யுபிஐ தளங்களில் பர்சனல் லோன்கள் வழங்கப்படுகிறது. அதோடு வங்கிகளும் பர்சனல் லோன்களை குறைந்த வட்டியில் வழங்குகின்றன.

Advertisement

இதுவும் புதிதாக கிரெடிட் கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாகி வருகிறது. இனி வரும் காலத்தில் வங்கிகள் எவ்வாறு இந்த கிரெடிட் கார்டு பிரச்சனையை எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!