வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் இந்த கடைசி தேதி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் முதலே பலரும் கணக்கு தாக்கல் செய்துவிட்டனர். சுமார் 4 கோடி பேர் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலர் கடைசி நேரத்தில் பார்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டனர்.
தற்போது கடைசி தேதி நெருங்குவதால் கோடிக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படுகின்றனர். எனவே சில நேரங்களில் இணையதளத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நிறுவனங்களில் வேலை செய்து ஊதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ITR-1 மற்றும் ITR-2 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கான கடைசி தேதி ஜூலை 31. வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ITR-3 மற்றும் ITR-4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆகஸ்ட் 31 கடைசி நாள். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி நாள்.
மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!
மேலே கூறியவர்களில் வேலைக்கு செல்லும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கடைசி தேதி ஜூலை 31 உடன் முடிகிறது. இதுவரை, கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து வருமான வரி துறையிடமிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது சுற்றறிக்கையோ வெளியாகவில்லை.
தற்போதைக்கு வருமான வரி துறை இணையதளம் எந்தவித பெரிய தொழில்நுட்ப கோளாறுகளும் இன்றி சீராக செயல்பட்டு வருவதால், காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலக்கெடு நீட்டிக்கப்படுமா என காத்திருக்காமல் உடனே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நல்லது என்கின்றனர்.
பரந்தூர் ஏர்போர்ட் கைவிட்டு போனாலும் மெட்ரோ ரயில் கைகொடுக்கும்..!! CMRL சொன்ன குட்நியூஸ்..!!
இணையதளம் தொடர்ந்து முடங்கிவிட்டது என்பன போன்ற அசாதாரண சூழல்கள் ஏற்பட்டால் மட்டுமே அரசு காலக்கெடுவை நீட்டிக்கும் என்பதால், வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்கின்றனர்.
ஒரு வேளை ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
More Articles
- ITR filing 2026: வருமான வரி ரீஃபண்ட் தொகை எத்தனை நாட்களில் அக்கவுண்டிற்கு வரும்? வரி செலுத்துபவர்கள் கவனிங்க!
- வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? வெயிட் இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கு ரூ.10,000 லாபம்!!
- வேலைக்கு போறவங்க மட்டுமில்ல இந்த 9 பேரும் கூட வருமான வரி தாக்கல் செய்யனும்- ITR சட்டம் சொல்வது என்ன?
- கடன் முதல் விசா விண்ணப்பம் வரை: வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!!
- கோடிக்கணக்குல சம்பாதிக்கிறது மட்டும் முக்கியமில்ல..!! நம்ம தல தோனி செஞ்ச சம்பவத்த கேட்டீங்களா?
- வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!