விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களில் தியேட்டரில் இந்த படத்திற்கு வைப் செய்வதற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதமே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை வாரிய சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக, படம் பல மாதங்களாக வெளியாகாமல் போனது. இந்த சூழலில் தான் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரே ஆகிவிட்டார்.
விஜய் முதலமைச்சராக இருக்கும் வேளையில் அவரது படம் வெளியாவதாலும் அவருடைய கடைசி படம் என்பதாலும் ரசிகர்கள் ஜூலை 23ஆம் தேதிக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே படம் ஆன்லைனில் லீக் ஆனது இப்போது படத்தின் வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. நியூஸ் 9 லைவுக்கு பேட்டி அளித்துள்ள ரமேஷ் பாலா, ஜனநாயகன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிக உற்சாகமாக காத்திருந்தாலும் ஏற்கனவே படம் இணையதளத்தில் வெளியானது ஒட்டுமொத்தமாக படத்தின் வசூலை குறைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.
ஏராளமான மக்கள் ஆன்லைனில் படத்தை பார்த்து விட்டனர் என்பதால் நீண்ட கால அடிப்படையில் இந்த படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். முதல் நாள் ஷோவிலும் அந்த வார இறுதியிலும் சிறந்த வசூல் இருக்கும் ஆனால் நீண்ட நாட்கள் அடிப்படையில் இந்த படத்தின் வசூல் குறையும் என தெரிவித்திருக்கிறார்.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை எதிரொலி: சென்னையில் 7 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!
இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகி அதிக வசூலை குவித்த படமாக இருப்பது லியோ உலக அளவில் இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருக்கிறார். அதாவது படம் ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகிவிட்டது ஏராளமானவர்கள் பார்த்து விட்டார்கள் அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான் என்பதால் ஒட்டுமொத்தமாக படத்தின் வசூலில் 200 கோடி ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ரூ.9,000 குறைந்த தங்கம் விலை..!! இப்போ தங்கம் வாங்கலாமா? இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா?
ரசிகர்கள், தொண்டர்கள் திரளாக வந்து படத்தை காண்பார்கள் அதேவேளையில் விஜய்க்கு இருக்கக்கூடிய குடும்ப ரசிகர்கள் ஏற்கனவே படத்தை வீட்டில் பார்த்தவர்கள் திரை அரங்கிற்கு வருவது சந்தேகம் என்பதால் தான் வசூல் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய் முதலமைச்சராக இருப்பதன் காரணமாக வட மாநிலங்களில் ஜனநாயகன் திரைப்படம் சிறப்பாக ஓடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.முதல் நாளில் ஜனநாயகன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலையும் வார இறுதி முடியும் போது சுமார் 250 கோடி ரூபாய் வசூலையும் குவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்திருக்கிறார்.
More Articles
- லஞ்ச ஒழிப்பு துறை சோதனை எதிரொலி: சென்னையில் 7 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!
- கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்!
- வரியை குறைக்கும் விஜய் அரசு.. மத்திய அரசின் தொடர் கோரிக்கை.. தமிழ்நாட்டில் முக்கிய மாற்றம்..!
- பரபரப்பாக தயாராகும் விஜய் அரசின் முதல் பட்ஜெட்..! பெண்கள் எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு இருக்குமா?
- ஜனநாயகன் படம் ரிலீஸ்: 1 ரூபாய் கூட எக்ஸ்ட்ரா கூடாது..!! முதலமைச்சர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு..!!
- சேரியில்லா நகரங்கள்: விஜய் கையில் எடுக்கும் மாபெரும் திட்டம்.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?