நம் நாட்டின் ஆகச்சிறந்த தொழில் என்று விவசாயத்தைக் கூறலாம். பட்டப்படிப்பை முடித்துவிட்டு புதுமையான முறையில் விவசாயம் செய்து இன்று இலட்சங்களில் வருமானம் பார்த்து வருகிறார் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த சாஹர். அவர் அப்படி என்ன செய்கிறார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சாஹர் 2012-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். அவருடைய தந்தைக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருந்தது. காலம் காலமாக அவர்களுடைய குடும்பம் மாதுளை சாகுபடி செய்து வந்தது. ஆனால் மாதுளை சாகுபடிக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதிக வெயில் இருந்தாலும் சரி.. அதிக ஈரப்பதம் இருந்தாலும் சரி மாதுளை செடிகளை நோய்கள் தாக்கத் தொடங்கும்.
இதனால் அவற்றுக்கு ரசாயன மருந்து வாங்கவே அதிக செலவாகியுள்ளது. 10 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது. ஆனால் அதில் பாதிக்கு பாதி கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் வரை செலவு செய்து மாதுளை சாகுபடி செய்து வந்துள்ளார் சாஹர்.
மேலும் அறுவடை எல்லாம் முடிந்து 6 மாதங்கள் வரை காத்திருந்தால் தான் அந்த லாபத்தையும் பார்க்க முடியும். இப்படி பல பிரச்சினைகள் இருந்ததால் மாதுளை சாகுபடிக்கு பதிலாக வேறு ஏதாவது பயிரிட வேண்டும் என்று சாஹர் யோசித்துள்ளார். அந்தச் சமயத்தில் சாஹரின் நண்பர் முருங்கை சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாகக் கூறியுள்ளார்.
EPFO: 2 வருடம் வரை கரியர் பிரேக் எடுத்தால் பிஎஃப் பணம் என்னவாகும்? அக்கவுண்ட் மூடப்படுமா? வட்டி வருமா? வராதா?
உடனே எல்லா நிலத்திலும் முருங்கை சாகுபடி செய்யாமல் முதலில் 1 ஏக்கர் நிலத்தில் மட்டும் முருங்கை பயிரிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் அதற்கு முதலீடாக 4,000 ரூபாய் தேவைப்பட்டது. இதை வைத்து 400 கிராம் விதைகளை வாங்கி 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விதைத்தார். அதிலிருந்து 5 மாதங்களில் அதாவது ஜூன் மாதம் அறுவடை தொடங்கியது.
1 ஏக்கர் நிலத்திலிருந்து சாஹருக்கு கிட்டத்தட்ட 10 டன் முருங்கைக்காய் கிடைத்தது. இதை கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார். இப்படி செய்ததன் மூலம் 1 ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் வருமானமும் கிடைத்துள்ளது. இதுவே சாஹருக்கு பெரிய நம்பிக்கையாய் அமைந்தது.
மாதுளை சாகுபடி கைவிட்டாலும் முருங்கை சாகுபடியில் கிடைத்த லாபத்தின் காரணமாக 2018-ஆம் ஆண்டு மாதுளை மரங்களை எல்லாம் அகற்றிவிட்டு முருங்கை விதைகளை விதைத்தார். அவருடைய பெற்றோர் 10 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளனர். அதோடு இவர் கூடுதலாக 8 ஏக்கர் நிலத்தை வாங்கி முழுவதுமாக முருங்கை விவசாயம் செய்ய தொடங்கினார்.
தற்போது இவருடைய இடத்தில் ஓடிசி 3 மற்றும் ஓடிசி 4 ரக முருங்கை காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. ஆரம்பத்தில் ஒவ்வொரு மரத்திற்கும் 25 கிலோ வரை முருங்கக்காய் கிடைத்தது. மரங்கள் நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு மரத்திலும் 50 கிலோ வரை அறுவடை செய்துள்ளார்.
இப்போது இவருடைய தோட்டத்திலிருந்து மட்டும் 180 டன் முதல் 200 டன் வரை முருங்கைக் காய் கிடைக்கிறது. தன்னுடைய தோட்டத்தில் சாஹர் பயோகேஸ் பிளான்ட் ஒன்றையும் அமைத்துள்ளார். இதிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுமார் 200 முதல் 300 லிட்டர் கழிவுநீர் பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. இதனால் உரத்திற்கு பெரிதாக செலவாவதில்லை.
குறைவான இரசாயனமே பயன்படுத்துகிறார். பயோகேஸ் பிளான்ட் மூலம் சமையல் எரிவாயுவும் இலவசமாக கிடைக்கிறது. சாகுபடி செய்வது ஒரு விதமான வெற்றி என்றாலும் அதை சரியான இடத்தில் விற்பனை செய்வதும் முக்கியம். ஆரம்பத்தில் துபாய் வரை ஏற்றுமதி செய்த சாஹர், தற்போது ஹைதராபாத்தில் முருங்கைக்காய்க்கு அதிக தேவை இருப்பதால் அங்கு மட்டுமே தன்னுடைய முழு உற்பத்தியும் விற்பனை செய்து வருகிறார்.
குளிர் காலத்தில் முருங்கைக்காயின் விலை சற்று அதிகமாக இருக்கும். அதே நேரம் கோடை காலத்தில் விலை குறைவாக இருக்கும். இருந்தாலும் எல்லா நாட்களிலும் 50 ரூபாய் என்ற சராசரி விலையில் விற்பனை செய்கிறார். அது மட்டும் அல்ல தரமான முருங்கை விதைகளையும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கூடுதல் வருமானமும் பெற்று வருகிறார்.
இவரிடமிருந்து விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் 10,000 கிலோ வரை முருங்கை விதைகளை வாங்கி செல்கின்றனர். இப்படி முருங்கைக்காய் சாகுபடியை மட்டுமே கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.15 கோடி டர்ன்ஓவர் செய்து வருகிறார். செலவு போக லாபமாக ரூ.80 லட்சம் வரை கிடைக்கிறது
விவசாயம் என்ற உடன் பாரம்பரியமாக பயிரிடப்படும் அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றுக்கு மாற்றாக அவர் யோசித்த முடிவே இது போன்ற வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அதோடு சந்தையில் என்ன தேவை இருக்கிறது? என்பதை ஆராய்ந்து கொண்டு இறங்கினால் எந்த தொழிலிலும் வெற்றி காணலாம் என்பதற்கு சாஹர் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
More Articles
- தென்னந்தோப்பு வச்சிருக்கீங்களா? கூடுதலாக ஏக்கருக்கு ரூ.60,000 சம்பாதிக்க அசத்தலான ஐடியா!
- விவசாய கடனுக்கு இனி பிணையம் தேவையில்லை! 4% வட்டியில் ரூ.3 லட்சம் வரை சுலபமாக கடன் வாங்கலாம்! RBI அதிரடி!
- PM கிசான்: ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதை ஒரு முறை செக் பண்ணிட்டு.. ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணுங்க!
- பிஎம்-கிசான் 23-வது தவணை: உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவில்லையா? உடனே இதைச் சரிபார்க்கவும்!
- விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையில் பிணையம் இல்லாத கடன்! அதுவும் 4% வட்டியில்! அரசு வழங்கும் அசத்தலான திட்டம்!
- விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! ஜூன் மாதத்திற்குள் இதை செய்யலன்னா ரூ.2000 கிடைக்காது!