இந்தியா தற்போது எஸ்யூவி கார்களின் அலையில் மிதக்கிறது, காலம் காலமாக செடான், ஹேட்ச்பேக் கார்களுக்கு பெயர்போன இந்திய சந்தை தற்போது தலைகீழாக மாறி மொத்தமாக எஸ்யூவி டிரெண்டில் உள்ளது. இதனால் ஹேட்ச்பேக் கார்கள் கூட தற்போது எஸ்யூவி லுக்கில் வர துவங்கியுள்ளது, இதற்கு முக்கியமான உதாரணம் டாடா பன்ச், ரெனால்டு கிவிட் போன்ற கார்களை சொல்லாம்.
எஸ்யூவி பிரிவை பார்த்தால் இந்தியாவில் அதிகம் விற்கப்படும் கார்கள் என்றால் அது 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் கார்கள் தான் அதாவது சப் 4 மீட்டர்கள். இப்பிரிவில் பெரும் போட்டி இருக்கும் வேளையில் அனைத்து நிறுவனங்களும் போட்டிப்போடு புது புது கார்களை அறிமுகம் செய்து அசத்துகின்றன.
அந்த வகையில் கார் விற்பனையில் மன்னாக இருக்கும் மாருதி சுசூகி தனது புதிய ப்ரெசா காரை வெறும் 7.40 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய மாடல் காரில் புதிய இன்ஜினி ஆப்ஷன், கியர்பாக்ஸ் மேம்பாடு, புதிய வசதிகளும், வெளிப்புறத்தில் சில முக்கிய காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
பெங்களூரில் அதிர்ச்சி.. 18 மாடி கட்டிடம்.. அப்படியே சாயுது.. இடிக்க சொல்லி உத்தரவு!
இந்த புதிய 2026 ப்ரெசா மாடல் கார் தற்போது சந்தையில் இருக்கும் ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக், டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, கியா சோனட், கியா சைரஸ் கார்களுக்கு பெரும் போட்டியாக அமையும்.
மாருதி சுசூகி நிறுவனம் இப்புதிய காருக்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும், அதேபோல் சற்று பவர்ஃபுல்லான இன்ஜினை கொடுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் புதிதாக 1.0 லிட்டர் பூஸ்டர்ஜென் இன்ஜினை அறிமுகம் செய்துள்ளது, இந்த இன்ஜின் 110ஹெச்பி, 170 நியூட்டன் பவரை கொடுக்கிறது.
நந்தினி எடுத்த முடிவு.. தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா.. விஜய் அரசின் முடிவு என்ன..?
பழைய ப்ரெசா காரில் இருந்த 5 ஸ்பீட் கியர்பாக்ஸை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றார் போல் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ்-ஐ கொடுத்துள்ளது. இதோடு முன்பக்க இருக்கையில் வென்டிலேஷன், ஏர் ப்ரிபையர், 10.1 இன்ச் பெரிய டச்ஸ்கிரீன் என பல முக்கிய அம்சங்களை கொண்டு வந்து இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.
இதன் மூலம் மாருதியில் ஒரு வழியாக டர்போ ஆப்ஷன் கொண்டு வந்துள்ளது, பழைய மாடல்களை போலவே இந்த புதிய மாடலிலும் சிஎன்ஜி ஆப்ஷனை underbody-mounted kit மூலம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பூட் ஸ்பேஸ் கூடுதலாக கிடைக்கும், இதேபோன்ற சேவையை தான் விக்டோரிஸ் காரில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
More Articles
- புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்!
- மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!
- மாருதி சுசூகிக்கு பலத்த அடி! ரூ.1.32 லட்சம் கோடி காலி - இது சரிவின் ஆரம்பமா?
- மாருதி சுசூகி-க்கு இப்படியொரு நிலைமை வந்துடுச்சே.. eVitara வாங்க போறீங்களா முதல்ல இதை படிங்க..!!
- காசே இல்லனு சொல்றாங்க..! ஆனா கார் வாங்கி குவிக்கிறாங்க..! அதுவும் இந்த காருக்கு தான் டிமாண்டே!!
- 7 ஆண்டுகளில் இல்லாத சாதனை!! இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் இது தான்!! ஆச்சர்யம் தரும் தரவு!!