இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது, ஒருப்பக்கம் E20 பெட்ரோலை E25 பெட்ரோலாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது, இதேபோல் டீசலில் isobutanol கலக்கும் பணிகள் நடந்து வருகிறது..

Advertisement

இதற்கு மாறாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்களின் தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகிறது. மக்கள் மத்தியிலும் EV மற்றும் CNG வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருத்துள்ளது முக்கிய மாற்றமாக விளங்குகிறது.

Advertisement

இதில் மைலேஜ், விலை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டால் சமானிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது சிஎன்ஜி வாகனங்கள் தான். இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இந்த வேளையில் மாருதி சுசூகி நிறுவனம் சிஎன்ஜிக்கு பதிலாக CBG பயன்பாட்டை அதன் கார்களில் அதிகரிக்க புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. இதற்காக பெரும் முதலீட்டையும் செய்ய முடிவு செய்துள்ளது.

35 வருடத்திற்கு முன், இதே ஜூலை மாதம்! இந்தியா திவாலாகும் நிலையில் நாட்டையே காப்பாற்றிய தங்கத்தின் கதை தெரியுமா
Advertisement

CNG மற்றும் CBG ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான், இதன் உற்பத்தி முறை வேறுப்பட்டாலும் இரண்டையும் சிஎன்ஜி வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்த முடியும். இதில் சிஎன்ஜி என்பது வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் LNG மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் compressed biogas என்பது முழுக்க முழுக்க மாட்டு சானம், விவசாய கழிவு, திட கழிவுகள் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் மலிவான விலையில் தயாரித்து எரிபொருளாக தயாரிக்க முடியும். அந்த வகையில் சிஎன்ஜி வாகனங்ளின் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டை அதிகரிக்க மாருதி சுசூகி இந்தியாவில் 4 compressed biogas (CBG) உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

இந்த தொழிற்சாலைகளை அமைக்க முதல்கட்டமாக சுமார் 561 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. சிபிஜி என்பது சிஎன்ஜி-க்கு மாற்றாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் இருக்கும் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் மாருதி சுசூகி மட்டும் அல்லாமல் பல முன்னணி சாம்ராஜ்ஜியங்கள் இறங்கியுள்ளது.

தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்!

சிபிஜி மலிவு விலையில் அதிகளவில் தயாரிக்கப்படும் போது மக்கள் தற்போது வரிசை கட்டி நிற்பது குறையும், இதேபோல் குறைவான செலவில் வாகனங்களை இயக்கும். மாருதி சுசூகி சிஎன்ஜி கார்களை தற்போது ஹைப்ரிட் முறையிலும் கொண்டு வர திட்டமிட்டு வருவதால் மாருதி சுசூகி வாடிக்கையாளர்களின் எரிபொருள் தேவையை இந்த நிறுவனமே ஈடு செய்யும் முயற்சியாக இதை பார்க்கப்படுகிறது.

Advertisement

மாருதி சுசூகி ஏற்கனவே குஜராத்தில் மாற்று எரிபொருள் முயற்சி அடிப்படையில் CBG ஆலையை அமைத்து முழுவீச்சில் இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவில் Kharkhoda பகுதியில் 2வது CBG உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 4 புதிய ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.