ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருப்பக்கம் பெரிய அளவிலான நன்மை அளித்தாலும், இத்தொழில்நுட்பத்தால் டெக் ஊழியர்களின் வேலை நிரந்தரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஏஐ வளர்ச்சிக்கு ஏற்ப அதை லாபக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் பெரிய அளவிலான ஆரம்பக்கட்ட முதலீடுகள்.

Advertisement

இந்த நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஏஐ சேவை அளிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகளவிலான ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விரிவாக்கம் செய்வதிலும் முதலீடு செய்து வருகிறது. இந்த செலவுகளை ஈடுக்கட்ட இருக்கும் முக்கியமான பணிநீக்கம் மூலம் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அதன் மூலம் பணத்தை சேமிப்பது தான்.

Advertisement

இதே காரணத்தை காட்டி உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக பணிநீக்க திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதுக்குறித்து வெளியான தகவல் படி சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 2.5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வரும் என பிஸ்னஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக அதிகளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் தற்போது டெக் நிறுவனங்களை தாண்டி மீடியா, பைனான்ஸ் என அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் பணிநீக்கத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஏஐ.

Advertisement

இந்த ஏஐ ரேசில் நிறுவனங்கள் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கண்மூடித்தனமாக ஏஐ தொழில்நுட்பம் மற்றும் அதன் உள் கட்டமைப்பை அமைப்பதில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த அதீத முதலீட்டு காரணமாக செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் மைக்ரோசாப்ட்-ம் ஒன்று.

மைக்ரோசாப்ட் இந்த பணிநீக்கத்தில் சேல்ஸ், கண்சல்டிங், எக்ஸ்பாக்ஸ் பிரிவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிஸ்னஸ் இன்சைடர் ரிப்போர்ட் கூறுகிறது. ஜூன் 30,2025 நிலவரத்தின் படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 2.5 சதவீதம் எனில் கிட்டத்தட்ட 5000 பேர் இப்புதிய பணிநீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஜூலை 2025ல் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்.

Advertisement

இதுமட்டும் அல்லாமல் பெரிய அளவில் லாபம் இல்லாமல் இயங்கும் எக்ஸ்பாக்ஸ் பிரிவை தனியாக பிரித்து, தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்யும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக இப்பரிவிலும் பணிநீக்கம் ஏற்படலாம், சமீபத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்சோல் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.