ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அரசு ஜூலை 31-ஆம் தேதி வரை டெட்லைன் வழங்கியிருந்ததது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலானோர் தாக்கல் செய்துவிட்டனர். சிலர் ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு காலகேடு நீட்டிக்கப்படுமா? என்றும் காத்திருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

இதுவரையில் 5.9 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளனர். ஒரு சிலர் இந்த தேதியை தவறவிட்டிருப்பீர்கள். நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் என்றால் பயப்படத் தேவையில்லை. இன்னும் உங்களுக்கு சில வாய்ப்புகள் இருக்கிறது.

Advertisement

ஜூலை 31-ஆம் தேதியை தவறவிட்டவர்கள் என்ன செய்யலாம்?: ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் தாமதமாக தாக்கல் செய்யலாம். இதை பிலேட்டட் ரிட்டன் என்று கூறுவார்கள். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு வரியோடு சேர்த்து நீங்கள் அபராதமும் செலுத்தியாக வேண்டும்.

ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் எடுத்துட்டு போறீங்களா? முதல்ல இதை படிங்க!

உங்களுடைய ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் அதிகம் என்றால் அபராதமாக ரூ.5000 செலுத்த வேண்டும். அதுவே உங்களுடைய ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்குள் இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு கூடுதலாக வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி நிலுவையில் இருந்தால் அதை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

Advertisement

பிரிவு 234 ஏவின் கீழ் உங்கள் வரித் தொகைக்கு மாதத்திற்கு 1 சதவீதம் வட்டி விதிக்கப்படும். ஜூலை 31-ஆம் தேதி கடந்த பிறகு எவ்வளவு நாட்கள் வரி தாக்கல் செய்யாமல் இருக்கிறீர்களோ? அது வரையில் இந்த வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.

டிசம்பர் 31-ஐ தவறவிட்டால் என்ன நடக்கும்?: பிலேட்டட் ரிட்டன் தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த காலக்கெடுவையும் நீங்கள் தவற விட்டு விட்டால்.. அதிலிருந்து 48 மாதங்களுக்குள் அப்டேட்டட் ரிட்டன் தாக்கல் செய்யலாம்.

தொழில் முனைவோருக்கு கூடுதல் அவகாசம்: பிசினஸ் செய்பவர்கள் மற்றும் ப்ரொபஷனல்களுக்கு வருமான வரிச் சட்டம் 2026-இன் கீழ் கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஆடிட்டிங் தேவையில்லாதவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஐடிஆர் தாக்கல் செய்யலாம். டாக்ஸ் ஆடிட் தேவைப்படுபவர்கள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இந்தக் காலக்கெடுவைத் தவறவிடும் நபர்கள் தாமதமாக தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தாமதமாக ITR தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்: உங்களுக்கு நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் ஆண்டில் உங்களுக்கு பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட்டு இருந்தால் அதை அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்ல முடியாது. உங்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படலாம். ஏற்கனவே ஜூலை 31-ஆம் தேதியை கடந்து விட்டோம். எனவே வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் பிஸ்னஸ் உரிமையாளர்கள் சரியான காலக்கெடுவிற்குள் செலுத்துவது நல்லது.