டெல்லியில் CJP கட்சியினரின் தலைமையில் நடந்த மாபெரும் ஜென்Z தலைமைமுறையினரின் போராட்டம் குறித்த செய்தி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், மத்திய அரசால் இப்போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தர்மேந்திர பிரதான் தனது கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வீடியோ வாயிலாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். புதிய கல்வி அமைச்சராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகலாத் ஜோஷியை நியமித்ததை தாண்டி நாட்டின் தேர்வு முறைகளிலும், தேர்வுகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரவும் இனி வரும் காலத்தில் வினாத்தாள் கசிவு தடுக்கவும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர், முன்னாள் சிஇஓ, தற்போதைய சேர்மன் ஆக இருக்கும் நந்தன நிலேகனி தலைமையில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்த வீடியோவில் நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவித்தார். இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை காப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகும் இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என மோடி தனது வீடியோ பதிவில் தெரிவித்தார்.
யார் இந்த நந்தன் நிலேகனி..? இவர் தேர்வு செய்யப்பட என்ன காரணம்..?
நந்தன் நிலேகனி இன்போசிஸ் தலைவராக மட்டும் அல்லாமல் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு அடித்தளமிட்ட ஆதார் தளத்தையும், அதன் கட்டமைப்பையும் உருவாக்கியவர். இன்று ஆதார் தான் அனைத்து விதமான வங்கி சேவை, Ekyc, யூபிஐ போன்ற சேவைகளுக்கு அடித்தளமாக உள்ளது.
இதை தாண்டி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஈகாமர்ஸ் துறையில் நாட்டில் சிறு சிறு பெட்டிக்கடைகளையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ONDC தளத்தை உருவாக்கியதும் நந்தன் தலைமையிலான குழு தான்.
இந்த நிலையில் இந்தியாவில் போட்டி தேர்வு மற்றும் அனைத்து விதமான தேர்வுகளையும், அதன் முறைகளையும் ஆய்வு செய்ய சீரமைப்பு செய்யும் முக்கிய பொறுப்பை தற்போது நந்தன் ஏற்கிறார். தற்போது நந்தன் நிலேகனியின் முக்கிய பணி என்னவென்றால் இந்த நீட் தேர்வு முறைகேடு எப்படி நடந்தது என்பதை முழுமையாக தெரிந்துக்கொண்டு அதன் அடிப்படையில் சீர்திருத்தம் செய்வது தான்.
More Articles
- அடிசக்க இன்போசிஸ் சொன்ன விஷயத்தை கேட்டீங்களா.. புது சிஇஓ வந்த நேரம் பண மழை..!
- இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் ராஜினாமா.. புதிய சிஇஓ யார் தெரியுமா..?
- ஐடி பங்குகள் திடீரென உயர்வு.. மீண்டும் பிறந்தது பொற்காலம்..? TCS, Infosys மாஸ்!
- சும்மா இல்ல ரூ.290 கோடி..!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி தேடி தேடி முதலீடு செய்த 2 பங்குகள்..!!
- ஊர்லேயே பெரிய தலைக்கட்டு.. 55% சரிந்த டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகளை வாங்குவது ஏன்.. புரியாத புதிர்!
- டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிலைமை ரொம்ப மோசம்.. மார்கன் ஸ்டான்லி சொன்ன பகீர் தகவல்!