ஈரான் நாட்டின் முன்னாள் உயரிய தலைவர் அயத்துல்லா அலி கமேனி இஸ்ரேலின் தாக்குதலில் மறைந்த நிலையில், இவரின் உடலுக்கு ஜூலை 4-9 வரையிலான காலக்கட்டத்தில் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இந்த இறுதி சடங்களில் அயதுல்லா அலி கமேனியின் மகனும், தற்போதைய உயரிய தலைவருமான முஜ்தபா கமேனி கலந்துக்கொள்ளவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவுக்கான ஈரான் நாட்டின் உறுப்பினரான அயத்துல்லா ஹகிம் இலாஹி கூறுகையில், பாதுகாப்பு காரணமாக முஜ்தபா கமேனி தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ளமாட்டார் என தெரிவித்தார். இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம் இஸ்ரேல் கொடுத்த மிரட்டல் தான்.

சமீபத்தில் ஈரான் நிதியமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் தங்களுடைய செல்லபிராணியான இஸ்ரேலை கட்டுப்படுத்த வேண்டும் என கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் பாதுக்காப்பு துறை அமைச்சரான கார்ஸ், ஈரான் நாட்டின் தற்போதைய தலைவரான முஜ்தபா கமேனி-க்கு டார்கெட் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதன் வாயிலாக முஜ்தபா கமேனியின் பாதுக்காப்பு கருதி இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வேண்டாம் என ஈரான் நாட்டின் உயர்மட்ட நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

Advertisement

இதற்கிடையில் தான் ஜூலை 1 ஆம் தேதி கத்தார், பாகிஸ்தான் தலைமையில் தோஹாவில் அமெரிக்கா - ஈரான் மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 14 திட்ட புரிந்துணர்வு தொடர்பாக நடந்த விவாதத்தில் சில சாதகமான முடிவுகளை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில், இந்திய பிரதமருக்கு இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிடிபி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்திய அரசு சார்ப்பில் சென்று கலந்துக்கொள்ள உள்ளனர். மெஹ்பூபா முஃப்தி வியாழக்கிழமை டெல்லியில் இருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரான்-க்கு சென்று, 4ஆம் தேதி நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். இவர்களை தவிர பிற அரசு அதிகாரிகளும் இந்தியா சார்பாக கலந்துக்கொள்கின்றனர்.