இந்திய மக்களின் முக்கிய நுகர்வு பொருளான நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட உள்ளதாக நந்தினி பிராண்டை நிர்வாகம் செய்யும் KMF அமைப்பின் கீழ் இயங்கும் பெங்களூர் கூட்டுறவு பால் சங்கம் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்த புதிய விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் நெய், வெண்ணெய்-யின் பாக்கெட் சைஸ்க்கு ஏற்றார் போல் விலை மாறுப்படும் என அறிவித்துள்ளது. இப்புதிய விலை நிலைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அளவிலான பால் பொருட்கள் நிர்வாக அமைப்பான கர்நாடக பால் அமைப்பு (KMF) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வெள்ளிக்கிழமை முதல் ஒரு லிட்டர் நந்தினி நெய் 15 ரூபாயும், ஒரு கிலோ வெண்ணெய் 50 ரூபாயும் உயர உள்ளதாக அறிவித்துள்ளது. இப்புதிய விலை இன்று வெளியாகும் அனைத்து பாக்கெட்களும் அச்சிடப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஒரு லிட்டர் நந்தினி நெய் தற்போது 715 ரூபாய்க்கும், நந்தினி வெண்ணெய் 660 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடைசியாக கர்நாடக பால் அமைப்பு (KMF) 2025 நவம்பர் மாதம் நெய் விலையை 90 ரூபாயும், வெண்ணெய் விலையை 26 ரூபாயும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நந்தினி பிராண்டின் நெய், வெண்ணெய்-க்கு சந்தையில் டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும், வர்த்தக சந்தை, உற்பத்தி செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய விலை உயர்வுக்கு பின்பும் சந்தையில் பெரும்பாலான பிராண்டுகளின் நெய், வெண்ணெய்-யின் விலையை காட்டிலும் குறைவாகவே உள்ளது.சந்தை நிலைக்கு ஏற்ப விலை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது பொருளாதார ரீதியாக அவசியம் என KMF அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக உணவில் நெய், வெண்ணெய் முக்கிய பங்காற்றும் வேளையில், இனி ஹோட்டல்களில் உணவு விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது விலை உயர்வை பார்க்கும் வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் விலை உயர்வு இருக்க வாய்ப்பில்லை என பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டெக்கான் ஹெரால்டுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எப்படி ஆவின் பிராண்டை நிர்வாகம் செய்கிறதோ, அதேபோலவே KMF இயங்குகிறது. இத்தகைய நிலையில் தமிழ்நாட்டிலும் பால், தயிர், நெய், வெண்ணெய் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆவின் நெய் 1 லிட்டர் 690 ரூராய்க்கு விற்கப்படுகிறது, வெண்ணெய் ஒரு கிலோ 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More Articles
- புதிய வணிகத்திலும் சக்கை போடு போடும் நந்தினி! இட்லி, தோசை மாவு விரைவு வர்த்தக தளங்களில் அறிமுகம்!
- கிரீஸ் டப்பாவை எப்படி ஒதைச்ச.. Amul-ஐ திருப்பி அடிக்கும் பெங்களூர் நந்தினி..!!
- நந்தினி-யை விரட்டும் மில்மா.. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..!!
- Nandini VS Amul விவகாரத்தால் சூடாகும் பெங்களூர் அரசியல் களம்.. அனல் பறக்கும் டிவிட்டர்..!
- ஆவினில் இனி பச்சை பால் பாக்கெட் கிடைக்காதா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!
- ஆவின் பாலகம் திறக்க எவ்வளவு முதலீடு தேவை? எவ்வளவு லாபம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பம் செய்வது?