வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ITR தரவுகள் அடிப்படையில் முக்கயமான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளது என ஐடிஆர் தரவுகள் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
லோக் சபாவில் எழுந்த கேள்விக்கு பதில் அளித்த நிதிதுறை சேர்ந்த பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலில், 100 கோடிக்கும் அதிக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021-22 கணக்கீட்டு ஆண்டில் வெறும் 142 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் நிதியாண்டில் இது 576 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்தியாவில் வருமான வரி சட்டத்தில் பில்லியனர் என்ற கணக்கீடு இல்லை, ஆனால் அரசு தொடர்ந்து 100 கோடிக்கும் அதிக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருவதாக விளக்கினார்.
இதேவேளையில் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு உள்ளது, இந்தியாவில் 15 வயதுக்கும் அதிகமானோர் மத்தியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 2022ல் 3.6 சதவீதமாக இருந்தது, இது 2025 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் வறுமை பல வகையில் நாட்டில் குறைந்துள்ளது என நித்தி அயோக் தெரிவித்துள்ளது.
More Articles
- வருமான வரி கணக்கு தாக்கல்: கடைசி தேதி நீட்டிக்கப்படுமா? அரசு என்ன சொல்கிறது?
- சிம் கார்டு தொலைந்து விட்டதா? வருமான வரி தாக்கல் செய்ய முடியவில்லையா? இ-ஃபைலிங் போர்ட்டலில் நுழைய ஈஸி வழி!
- ஐடிஆர் போர்ட்டலில் தொழில்நுட்பக் கோளாறு: வரி செலுத்தியும் அப்டேட் ஆகவில்லையா? இதோ எளிய தீர்வுகள்!
- வருமான வரி தாக்கல்: ஜூலை 31-க்குள் இதைச் செய்யாவிட்டால் அபராதம் நிச்சயம்! நீங்கள் தயாரா?
- ஜூலை மாதத்தில் இதையெல்லாம் மற்றக்காம பண்ணிடுங்க.. வருமான வரி தாக்கல் டெட்லைன் நெருங்குது!
- வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? வெயிட் இந்த விஷயம் தெரிஞ்சா உங்களுக்கு ரூ.10,000 லாபம்!!