அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கும் வேளையில் ஹார்முஸ் நீரிணை மீண்டும் மொத்தமாக முடக்குவதற்கு ஈரானும், ஈரான் துறைமுகங்களை கட்டம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படையும் தயாராகியிருக்கும் வேளையில் பெரும் நெருக்கடையை உருவாக்க யெமன் களத்தில் இறங்கியுள்ளது.
ஈரானுக்கு துணை நிற்கும் வகையில் யெமன், வளைகுடா பகுதியில் மிக முக்கியமான கடல்வழி பாதையான Bab al-Mandeb Strait-ஐ முடக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்க கண்டத்தில் இருந்து ஆசிய நாடுகளுக்கு வேகமான வர்த்தக பாதையாக இருக்கிறது Bab al-Mandeb Strait.
யெமன் நாட்டின் அன்சருல்லா இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினர் முகமது அல்-ஃபரா கூறுகையில், சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஹர்முஸ் மற்றும் பாம் அல் மண்டெப் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மூடிவிடுவோம் என ஈரான் நாட்டின் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்கா ஈரான் மீதும், சவுதி அரேபியா யெமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் இரு வழித்தடங்களும் முடக்கப்படும். இதன் மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 200 டாலர் வரையில் உயரும், இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் வர்த்தகம் என அனைத்தும் மொத்தமாக முடங்கும் அபாயம் உருவாகும் என கணிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் தற்போது 81 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும் வேளையில், பெட்ரோல் விலை 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 100 டாலருக்கு வர்த்தகமான போது நடந்தது. தற்போது 200 டாலராக உயர்ந்தால் கட்டாயம் பெட்ரோல் விலை 220-230 ரூபாய் வரையில் உயரும்.
பாப் அல் மண்டெப் என்பது செங்கடல் மற்றும் கல்ப் ஆப் ஏடன் இணைந்து சூஸ் கால்வாயின் தெற்கு கதவுகளாக உள்ளது. இந்த வழித்தடம் ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் முக்கிய சரக்கு போக்குவரத்து பாதையாக உள்ளது.
பாப் அல் மண்டெப் வழித்தடத்தில் தினமும் 8.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் பயணிக்கிறது. இவ்வழித்தடத்தில் உலகின் 10-12 சதவீத கடல்வழிபோக்குவகத்து நடக்கிறது.
ஹார்முஸ் நீரிணை வாயிலாக சுமார் 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஒரு நாளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்விரு வழித்தடத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
More Articles
- பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு.. நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு.. யாருக்கு பாதிப்பு?
- SUV எல்லாம் இனி செட் ஆகாது.. மீண்டும் பழையப்படி குட்டி காருக்கு மாறிய மக்கள்!
- தர்மேந்திர பிரதானை தொடர்ந்து நிதின் கட்கரிக்கும் சிக்கல்? CJP போல உதயமானது E20 ஜனதா கட்சி..!!
- Nitin Gadkari: E20 பெட்ரோல் புடிக்கலையா.. 100% பெட்ரோல் வாங்கிக்கோங்க.. ஆனா விலை அதிகம்!
- Nitin Gadkari: மகன்களுக்காக பெட்ரோலில் எத்தனால் கலக்கிறேனா..? பொங்கி எழுந்த நிதின் கட்கரி.. என்ன நடந்தது?
- நெடுஞ்சாலையில் செல்லும் போது பெட்ரோல் தீர்ந்துவிட்டால் சுங்கச் சாவடிகளில் இலவச பெட்ரோல் கிடைக்குமா?