இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை திடீரென விமான கட்டுப்பாட்டு தளத்தின் இணைப்பில் இருந்து மாயமாகி காணாமல் போய்யுள்ளதாக பாகிஸ்கான் ஏவியேஷன் அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
விமானங்கள் மாயமாவது என்பது மிகவும் அரிதாக நடக்கும் விஷயம், விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டால் பெரும்பலான வாய்ப்பு விமானம் விபத்துக்குள்ளயிருக்கும்.
சார்ஜாவில் இருந்து கராச்சி வந்த பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட போயிங் 737 கார்கோ விமானம் மற்றும் அதனுடன் வந்த 5 விமான பணியாளர்கள் இருந்தனர். பொதுவாக இத்தகைய பெரிய சரக்கு விமானத்தில் 23 டன் வரையில் பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல முடியும்.
முதலில் இந்த விமானத்தில் இருந்து நேவிகேஷன் சிஸ்டம் பிரச்சனை இருந்தாக விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு சிக்னல் வந்துள்ளது, இதன் பின்பு மொத்தமாக மறைந்தது. 2018ல் துவங்கப்பட்ட கே2 ஏர்வேஸ் இயக்கும் இந்த 27 வருட சரக்கு விமானம் கராச்சியின் தென்மேற்கு கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என விமான டிராக்கிங் நிறுவனமான பிளைட்ரேடார்24 தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் விமான துறை விமானம் விழுத்திருக்கலாம் என கணிக்கப்படும் இடத்தை குறித்து தற்போது தேடுதல் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது, இதற்காக பல அமைப்புகள் இணைந்து பணியாற்றுவதாக பாகிஸ்தான் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி பேஸ்புக் பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளது.
கடைசியாக இந்த போயிங் சரக்கு விமான நேற்று இரவு 9.18 மணிக்கு அந்நாட்டின் நேவிகேஷன் சிஸ்டத்தில் இருந்தது பதிவாகியுள்ளது. இந்த விமானத்தை விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து வழிநடத்தி வந்தாலும் அடுத்த 3 நிமிடத்தில் விமானம் வேகமாக தரையை நோக்கி இறங்குவது ரேடாரில் பதிவாகியுள்ளது. இவ்விமானத்தில் இருந்து இறுதி சிக்னல் கராச்சியில் இருந்து 287 கிலோமிட்டர் மேற்கு பகுதியில் இருந்து வந்துள்ளது.
கடைசியாக பாகிஸ்தானில் விமான விபத்து ஏற்பட்டது 2020ல், பாகிஸ்தான் இண்டர்நேஷ்ன் ஏர்லைன்ஸ் கராச்சி விமான நிலையத்திற்கு வரும் போது விபத்துக்குள்ளானதில் 99 பேர் மரணம் அடைந்தனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் அரசு கராச்சி விமான நிலையத்தில் பாதுக்காப்பான விமான இயக்கத்தையும், இதற்கு தேவையான தொழில்நுட்ப மேம்பாட்டை செய்ய ஆய்வு கூட்டம் நடத்தியது. இதேபோல் லாகூரில் இருக்கும் Allama Iqbal International Airport-ஐ மேம்படுத்த 19.3 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் முதலீடு செய்யவும் முடிவுகள் எடுக்கப்பட்டத்து.
More Articles
- 10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன?
- பிட்காயின், கிரிப்டோ வைத்திருப்பது 'Haram'.. பாகிஸ்தான் அமைப்பின் அறிவிப்பு..!
- இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்.. கைகளை வெட்டிவிடுவோம்!
- பாகிஸ்தான் செய்த திடீர் தாக்குதல்.. 29 ஆப்கான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.. அதிர்ச்சியில் தாலிபான்கள்!
- ஆபரேஷன் சிந்தூர்: துல்லிய தாக்குதலில் கில்லி என்பதை நிரூபித்த இந்தியா! இந்த ஒரு டெக்னாலஜி தான் மாஸ்!
- ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!