இந்தியாவில் தற்போது பல வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் புது புது துறையில் இறங்குவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது, உலகளவில் வர்த்தக தடுமாற்றங்களும், மந்தநிலையும் உருவாக்கியுள்ள வேளையில் பெரும் நிதி ஆதாரம் கொண்ட நிறுவனங்கள் புது துறையில் இறங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் மார்ச் மாதம் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஆயுர்வேதம் மற்றும் FMCG பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான பதஞ்சலியும், ரஜினிகந்தா பான் மசாலா தயாரிக்கும் நிறுவனமான DS குரூப் இணைந்து மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக வாங்க முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த கைப்பற்றும் முயற்சிக்கு நாட்டின் உயரிய இன்சூரன்ஸ் கட்டமைப்பான IRDAI ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒரு ஒப்புதல் மூலம் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனமும், பான் மசாலா தயாரிக்கும் DS குரூப் நிறுவனமும் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அதிகாரப்பூர்வமாக இறங்குகிறது.
மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது கொரோனா தொற்றுக்கு வேக்சின் தயாரித்த சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆன Adar Poonawalla-வின் சொந்த நிறுவனமான Sanoti Properties கீழ் இயங்கி வருகிறது.
AI இன்ஜினியரின் புலம்பல்.. வாயை கட்டி வயித்தை கட்டி அமெரிக்கா போனா.. இந்தியாவுக்கே அனுப்பிட்டாங்க..!
இந்த நிலையில் மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களும் தங்களுடைய பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய தயாராகியிருக்கும் நிலையில் பதஞ்சலி நிறுவனம் 73.6 சதவீத பங்குகளையும், டிஎஸ் குரூப் 24.5 சதவீத பங்குகளையும் வாங்க திட்டமிட்டு மொத்தம் 4500 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனத்தை வாங்க உள்ளது.
புதிய நிர்வாகத்தின் கீழ் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் ப்ரோமோட்டராக இருக்கபோகிறது, இதேபோல் இரு பங்குதாரர்களும் வளர்ச்சிக்காக பெரும் முதலீட்டை தொடர்ந்து செய்ய ஆர்வமாக உள்ளது.
பெங்களூர்: என்னய்யா ஊர் இது.. Layoffக்கு மத்தியில் ரூ.6 கோடிக்கு அப்பார்ட்மென்ட் வீட்டை வாங்குறாங்க.. எப்படி?
மேக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்யில் சுமார் 141 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில் 2025ஆம் ஆண்டில் 1 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது, இதேபோல் 2021-2025 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 22 சதவீத CAGR வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது, இத்துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களின் சராசரி 10 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் மிகப்பெரிய விஷயமாக உள்ளது.
பதஞ்சலி நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் புதிய இன்சூரன்ஸ் வர்த்தகத்தை சிறு நகரங்கள், கிராமங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தில் உள்ளது. இதேபோல் பதஞ்சலிக்கு ஏற்கனவே ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான வர்த்தக அனுபவமும், நெட்வொர்க்-ம் இருக்கும் நிலையில் ஜென்ரல் இன்சூரன்ஸ் துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
More Articles
- 2:1 போனஸ் பங்கு.. 5300% மல்டிபேக்கர் வருமானம்.. 1 வாரத்தில் 17% லாபம் பார்த்த பதாஞ்சலி ஃபுட்ஸ்..!!
- தப்பித்தவறி கூட பதஞ்சலி-யின் இந்த 14 ஆயுர்வேத பொருட்களை வாங்கிடாதீங்க..!
- பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் கும்பல்.. கொதித்தெழுந்த பாபா ராம்தேவ்!
- பதஞ்சலி நிறுவனத்திற்கு வந்த புதிய பிரச்சனை.. GST புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ்.. என்ன நடந்தது?
- பாபா ராம்தேவ்-க்கு ஷாக் கொடுத்த உத்தரகண்ட்.. 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமங்கள் ரத்து..!
- வர்த்தகத்தை விற்கும் பாபா ராம்தேவ்.. வாங்குவது யார் தெரியுமா..?