இந்தியாவில் வங்கி வேலைகளுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தான் வங்கி வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி தந்துள்ளது.

Advertisement

ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த 2 ஆண்டுகளாக 1 லட்சத்துக்கும் அதிகமான புதிய ஊழியர்களை சேர்த்து கொண்ட வங்கிகள் கடந்த ஆண்டில் 21,000 பேரை மட்டுமே புதிதாக வேலைக்கு சேர்த்துள்ளன. குறிப்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து ஊழியர்களை சேர்த்து வந்த தனியார் வங்கிகள், 2025-ஆம் நிதியாண்டில் அதனை குறைத்து விட்டன. வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்தவும் , மாறிவரும் வணிக தேவைகளுக்கு ஏற்பவும் தனியார் வங்கிகள் தங்கள் பணியாளர் எண்ணிக்கையை குறைத்துள்ளன. அதாவது தனியார் வங்கிகளின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 8,45,407 ஆக இருந்து 8,38,150 ஆக சரிந்துள்ளது.

Advertisement

குறிப்பாக, ஐசிஐசிஐ வங்கி தனது பணியாளர் எண்ணிக்கையை அதிகளவில் குறைத்துள்ளது. சுமார் 6000 பேரை குறைத்துள்ளது. ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழியர்கள் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வந்த பொதுத்துறை வங்கிகள் 2025-ஆம் நிதியாண்டில் மிக சிறிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இவற்றின் ஊழியர்கள் எண்ணிக்கை 7,56,015-லிருந்து 7,57,641 ஆக உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற பெரிய வங்கிகள், கிராமப்புறங்களில் கிளைகளை விரிவாக்கம் செய்ததன் காரணமாக ஊழியர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Advertisement

வங்கித்துறையின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு சிறு நிதி வங்கிகளே முக்கிய ஆதாரமாக இருந்துள்ளன. இந்த வங்கிகள் சுமார் 16,000-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை சேர்த்துள்ளன. சில்லறை கடன் வழங்குதல் அதிகரித்து இவ்வகை சிறு வங்கிகள் விரிவாக்கம் செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு இது தான் தங்கம் விலை..!! அடித்து சொல்லும் நிபுணர்கள்..!!

வங்கித்துறையில் வேலைவாய்ப்பு குறைந்ததற்கு முக்கியமான காரணம் ஏஐ ஆகும். கணக்கு பராமரிப்பு, ஆவண சரிபார்ப்பு, கடன் செயலாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற வழக்கமான வேலைகளை தற்போது தொழில்நுட்பமே கவனித்து கொள்கிறது. இதனால், ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சேவைகளை வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்துகின்றன.மேலும்Data Analytics, Cybersecurity மற்றும் நிதி ஆலோசனைகள் போன்ற சிறப்பு திறன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளன என்கிறது இந்த அறிக்கை.

Advertisement
18 கேரட் தங்கத்தை அடகு வைத்து நகை கடன் வாங்க முடியுமா? விரிவான வழிகாட்டி..!!

தனியார் வங்கிகளில் ஆட்குறைப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்திய வங்கித்துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை 17.87 லட்சத்திலிருந்து 18.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், வங்கித்துறை முற்றிலுமாக ஆட்களை குறைக்கும் பாதைக்கு செல்லவில்லை, ஆனால் பணியாளர் கட்டமைப்பை மாற்றி அமைத்து வருகிறது. எனவே வங்கி வேலைகளுக்கு தயாராகும் நபர் ஏஐ, டேட்டா அனலிட்டீக்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்றவற்றில் திறமைய வளர்த்து கொள்வது வேலைவாய்ப்பை பிரகாசமாக்கும்.

மேலும் வங்கி வேலை தேடுபவர்கள், வரும் காலங்களில் பெரிய தனியார் வங்கிகளை மட்டும் நம்பியிருக்காமல், பொதுத்துறை மற்றும் சிறு நிதி வங்கிகளிலும் புதிய வாய்ப்புகளை தேடுவதும் அவசியம்.