இந்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி துவங்கிய நிலையில், இக்கூட்டத்தின் முடிவுகள் நாளை ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிடுகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், ஏஐ முதலீடுகள், வேலைவாய்ப்பு என பல நெருக்கடிகள் மத்தியிலும் தனது பணவியல் கொள்கை முடிவுகளை வெளியிட்ட போது, வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அறிவித்தது.
கிட்டத்தட்ட இதே பாதிப்புகளை, சொல்லப்போனால் இந்தியா ரூபாய் மதிப்பு சரிவு மூலம் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, எல் நினோ பிரச்சனைகள் என அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இதற்கிடையில் நாளை ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா எத்தகைய முடிவுகளை அறிவிப்பார். இதனால் ஹோம் லோன் வாங்கியவர்கள், குறிப்பாக Floating வட்டி விகிதத்தில் கடன் வாங்கிய அனைவருக்கும் எத்தகைய தாக்கம் எற்படும் என்பதை இப்போது பார்ப்போம்.
ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முக்கிய காரணியாக இருப்பது ரீடைல் பணவீக்கம் தான். ஜூன் மாதம் நாட்டின் சில்லறை பணநீக்கம் 4.38 சதவீதமாக உள்ளது, இது ஆர்பிஐ-யின் முக்கியமான 4 சதவீத இலக்கை 17 மாதங்களுக்கு பின்பு முதல் முறையாக தாண்டியுள்ளது.
ஆர்பிஐயின் லோவர் மற்றும் அப்பர் இலக்கான 2-6 சதவீதத்திற்கு இடையிலேயே இருந்தாலும் 4 சதவீத அளவீட்டை தாண்டியது ஒரு எச்சரிக்கை மணி போன்றது.
இதனால் ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை மிகவும் எச்சரிக்கை உடன் கையாளும், காரணம் தற்போது நாணய புழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் உயர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆர்பிஐ பணவீக்கத்தை இந்த எல் நினோ காலத்திற்கு ஏற்றார் போல் கணக்கிட்டு தான் முடிவை எடுக்கும்.
சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் போலவே இந்திய ரிசர்வ் வங்கியும் தனது ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் என கணித்துள்ளனர். இதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை கருத்தில் கொண்டு தொடர்ந்து பணவீக்கத்தையும் கட்டுக்குள் வைக்கும் wait-and-watch அடிப்படையில் தான் இக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போதைய ரெப்போ விகிதமான 5.25 சதவீதம் என்ற பென்ச்மார்க் வட்டி விகிதம் தொடரும், அப்படி தொடரும்பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் மாறாமல் ஈஎம்ஐ தொடரும்.
ஆர்பிஐ பணவீக்கத்தை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற இலக்குடன கடுமையான நிலைப்பாட்டு உடன் ரெப்போ விகித்ததை 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதம் வரையில் உயர்த்தலாம். அப்படி உயர்ந்தால் ஹோம் லோன் மட்டும் அல்லாமல் ப்ளோட்டிங் ரேட் உடன் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களின் வட்டி விகிதம், ஈஎம்ஐ உயரும்.
More Articles
- Fixed deposit திட்டங்கள்: வங்கிகளுக்கு ஆர்பிஐ வைத்த செக்..!! எல்லாமே மாறுது..!!
- வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!!
- ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?
- மக்களே இனி இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் பிளாஸ்டிக்கா மாற போகுது..!! மத்திய அரசு அறிவிப்பு..!!
- மோடி போட்ட கணக்கு + RBI வெளியிட்ட அறிவிப்பு.. 45 நாளில் நடந்த எதிர்பாராத விஷயம்!
- இந்தியாவில் குறைந்து வரும் வங்கி வேலைவாய்ப்புகள்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!!