செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கி சேவையை எளிதாக்கி, மேம்படுத்தினாலும், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள கிளாட் மைதோஸ் ஏஐ மாடல் இந்திய நிதியமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அறியப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத FSR அறிக்கையில் ஏஐ அச்சுறுத்தல் மிகப்பெரிய பிரச்சனையாக அறிவித்துள்ளது.

Advertisement

இதுநாள் வரையில் மக்கள் தங்களுக்காக ஒரு வங்கியைத் தேர்வு செய்யும்போது, வட்டி விகிதம், சேவை தரம், வங்கி கிளையில் இருக்கும் வசதிகள் போன்றவற்றை பார்த்தே பெரும்பாலானோர் தங்களுடைய வங்கியை தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது வங்கியில் எந்த அளவுக்கு சைபர் பாதுகாப்பில் மேம்பட்டதாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

Advertisement

இந்திய ரிசர்வ் வங்கி FSR அறிக்கையை வெளியிட்ட கையோடு, அனைத்து வங்கிகள், NBFC-க்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் AI பயன்பாடு மற்றும் AI சார்ந்த பாதுகாப்பு பிரச்சனைகளை எப்படி நிர்வாகம் செய்யப்போகிறது என்பது குறித்த தெளிவான திட்டத்தை இயக்குநர் குழு (Board) ஒப்புதல் உடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இது வெறும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் டெக் பிரிவு பணி இல்லை, அல்லாமல் நிர்வாகக் குழுவின் பொறுப்பாக ஆர்பிஐ பார்க்கிறது. இதன் மூலம் மைதோஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உணர்த்துகிறது.

Advertisement

Claude Mythos என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இது ஒரு சாப்ட்வேர் அல்லது பாதுகாப்பு அமைப்பை முழுமையாக ஸ்கேன் செய்து அதில் உள்ள ஓட்டைகளை ஆய்வு செய்து சைபர் அட்டாக் செய்து உள்நுழையக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. இதனாலேயே அமெரிக்கா முதலில் இதை உலக நாடுகளுக்கு கொடுக்க தடை விதித்தது.

ஆனால் தற்போது பல கட்டுப்பாடுகள் உடன் Claude Mythos-ஐ உலக நாட்டு மக்கள் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனாலேயே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனால் ஒவ்வொரு வங்கியும் வலுவான சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. ஏஐ உதவியுடன் சோதனைகள் நடத்தி, வங்கி கட்டமைப்பில் இருக்கும் பாதிப்புகளை அடையாளம் கண்டு, நேரத்துக்கு ஏற்ற மாற்றங்களையும், மேம்பாட்டை செய்ய வேண்டும்.