தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலமாக இருக்கும் பட்டாசு துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான முயற்சியில் தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா இறங்கியிருக்கும் வேளையில், அவருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

Advertisement

ஐரோப்பாவின் மிகப்பெரிய பட்டாசு இறக்குமதி நிறுவனம் சிவகாசியில் இருந்து முதல் முறையாக பட்டாசுகளை வாங்குவதற்க ஆர்டர் செய்ய உள்ளதாக தொழிற்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவின் பட்டாசு விற்பனை சந்தை மிகப்பெரியதாக இருந்தாலும், சீனாவை போல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமத் செய்ய முடியாத நிலையில் தான் இன்று வரையில் உள்ளது.

இத்துறையில் ஏற்றமதி வர்த்தகத்திற்கான கதவுகள் திறந்தால் தீபாவளி பண்டிகையின் போது மட்டும் அல்லாமல் வருடம் முழுவதும் முழுவீச்சில் உற்பத்தியை மேம்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

இதோடு வெளிநாட்டு ஏற்றுமதி கதவுகள் திறந்தால் 2 விஷயம் நடக்கும் பட்டாசு தயாரிப்பில் தொழில்நுட்பம் முன்னேறம், அதன் தரமும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் சீனா போல் மலிவான விலையில் தரமான பொருட்களை உள்நாட்டு சந்தையிலும், வெளிநாட்டு சந்தைக்குமான பொருட்களை தயாரிக்க முடியும்.

Advertisement

சிவகாசி பட்டாசுகளை வாங்குவதற்காக விருப்பம் தெரிவித்துள்ள ஐரோப்பிய நிறுவனம் முதல் கட்டமாக 50 கண்டெய்னர்கள் அளவிலான பட்டாசுகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேபோல் இதை தொடர்ந்து இனி வரும் ஆண்டுகளில் கூடுதலாக வாங்கவும் ஆர்வமாக இருப்பதாக தமிழ்நாடு தொழிற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழில் துறைக்கு வெளிநாட்டுச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளை விரிவாரவிரிவுபடுத்தும் நோக்கில் தொழிற்துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து இந்த ஆர்டர் வர உள்ளது.