இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி விட்டது, ஆடி (ஜூலை) மாதம் துவங்கியதில் இருந்து ஐப்பசி (நவம்பர்) மாதம் தீபாவளி வரையில் பண்டிகை காலம் என்பதால் நுகர்வோர் சந்தையின் வர்த்தகம் உச்சத்தில் இருக்கும். இது முக்கியமான காலம் என்பதால் அடுத்த 3 மாதங்களின் உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நிறுவனங்கள் வாங்கி குவிக்க வேண்டிய காலம் இது.
ஆனால் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரம், பிளாஸ்டிக் பொருட்கள், எண்ணெய் அடிப்படையிலான சாயம், கெமிக்கல் என அனைத்தும் விலை அதிகரித்துவிட்டது.
இதனால் நிறுவனங்கள் அதிகப்படியான விலையில் உள்ளீட்டு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் பண்டிகை காலத்தில் டூத்பேஸ்ட், டையர் முதல், பெயின்ட் வரையில் அனைத்து பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் குறிப்பாக மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை 30000 ரூபாய் வரையில் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக ரீடைல் சந்தையில் நுகர்வோர் நிறுவனங்கள் FMCG நிறுவனங்கள் தனது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இந்த காலாண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த காலாண்டின் துவங்கத்தில் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதற்கான ஆய்வுகளை துவங்கியுள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் போல் டெட்லா டெய்ரி, ஏசியன் பெயின்ட்ஸ் என சுமார் 7 நிறுவனங்கள் இக்காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு விலை உயர்வு குறித்த ஆய்வுகளை செய்ய துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய்க்கும் FMCG பொருட்களுக்கும் என்ன தொடர்பு என கேட்கலாம், ஒவ்வொரு பொருளில் பயன்படுத்தும் பேகேஜிங், கெமிக்கல், போக்குவரத்து வரையில் அனைத்திலும் கச்சா எண்ணெய் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் பங்கீடு உள்ளது.
அனைத்து பொருட்களின் விலை உயர்ந்தால் அடுத்தக்கட்டமாக நாட்டில் பணவீக்கம் உயரும், இதை கட்டுப்படுத்த ஆர்பிஐ களத்தில் இறங்கினால் வட்டி விகிதத்தை உயர்ந்து கூடும். இதனால் அனைத்து விதமான கடன்களின் வட்டி விகிதம் உயர்ந்து ஈஎம்ஐ அதிகரிக்கும்.
இதேவேளையில் ரீடைல் பணவீக்கம் 1.5 வருடத்திற்கு பின்பு ஆர்பிஐயின் பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை தாண்டியுள்ளது, ஆனாலும் ஆர்பிஐயின் லோவர் மற்றும் அப்பர் இலக்கான 2-6 சதவீதம் அளவீட்டிற்குள்ளேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் விலைவாசி உயர்வில் மாட்டிக்கொள்வதற்கு பதிலாக இப்போதே தேவையான பொருட்களை வாங்குவதும் உத்தமம். இதனால் குறைந்தபட்சம் உங்க வீட்டு பட்ஜெட்டில் 2-3 சதவீத தொகையை கட்டாயம் சேமிக்க முடியும், மேலும் தற்போது நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்தாமல் எடையை குறைத்து விலை உயர்வை சமாளிக்கிறது.
More Articles
- பிஸ்கட் முதல் சோப்பு வரை! ரேட் எகிறப் போகுது! ரெடியாகுங்க மக்களே! FMCG நிறுவனங்கள் கொடுத்த ஷாக்!
- ரூ.40,000 கோடியுடன் களமிறங்கும் முகேஷ் அம்பானி!! பாஸ் இங்கயும் வந்துட்டீங்களா?
- ஜிஎஸ்டி 2.0 பொருளாதாரத்தில் ரூ.2 டிரில்லியன் முதலீடு.. 90% பொருட்களுக்கு இப்போ 18% வரி.!!
- உலக CEO-க்களை உருவாக்கிய ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல்.. தற்போது யார் தெரியுமா? கட்டணம் எவ்வளவு..?
- தமிழ்நாட்டில் இப்படியொரு வேலை நடக்குதா..? பலே பலே..!
- MTR, Eastern.. 2 பெரிய நிறுவனங்களை வாங்க முட்டிமோதும் ஐடிசி..!