தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இந்த அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை செயலகத்தில் தொடங்கிய நிலையில் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Advertisement

இன்று நடைபெற்ற கூட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய ஒப்புல் அளிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளை துவங்க உள்ளார்.

Advertisement

முந்தைய ஆட்சியில் இருந்து திமுக அரசு இடைக்கால பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் அதாவது நடப்பு நிதியாண்டில் மிதமுள்ள 5 மாதங்களுக்கான பட்ஜெட் அறிக்கையை தவெக அரசு தாக்கல் செய்யும்.

விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விஜய் தலைமையில் ஜூலை 2 -22 வரையிலான காலக்கட்டத்தில் துறை வாரியாக நடந்த ஆலோசனை கூட்டங்களில் சில முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதில் முக்கியமாக ஒவ்வொரு துறைக்கும் 1 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு செயல் திட்டங்கள் தயாரிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

இதன் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறையும் முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் அப்டேட் செய்வார்கள். இதன் அடிப்படையில் பட்ஜெட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், 13 லட்சம் கோடி அளவுக்கு கடன் இருப்பதன் காரணமாக இத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால அவகாசம் அதற்கான பயனாளிகள் தேர்வு என அனைத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதையும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்
அறிவித்தலாக வழங்கி இருக்கிறார்.

Advertisement

இதனால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள், திருமண உதவியாக 8 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.