தமிழ்நாட்டில் தொன்று தொட்டு முதலமைச்சர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து விஜய் வேறு இடத்திற்கு மாற இருக்கிறார். இதன் படி முதலமைச்சர் விஜய், தான் இதுவரை தான் பணியாற்றி வந்த தலைமை செயலக முதன்மை கட்டிடத்திலிருந்து, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தனது அலுவலகத்தை மாற்ற போகிறாராம்.
காமராஜர் சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இங்கே முதன்மை கட்டடத்தில் முதல் தளத்தில் முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனை தான் தற்போது இடம் மாற்றம் செய்கின்றனர். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்-இன் அலுவலகத்தை மாற்றுவதற்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கவிஞர் மாளிகை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே தான் இருக்கிறது.
கடந்த 1975ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 10 அடுக்கு மாடி கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்பட உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. இந்த தளத்தில் இருந்து கடல் அழகை கண்டு ரசிக்க முடியுமாம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்களிலேயே பாரம்பரிய அலுவலக கட்டடத்தில் இருந்து புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் முதல் நபர் விஜய் தான். தற்போதுள்ள முதன்மை கட்டடத்தில் இட நெருக்கடி அதிகரித்துள்ளதாம். மேலும் பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளதால் அதனையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட முடிவு என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்களே ஜூலை 31 தான் கடைசி நாள்.. இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..!!
ஆகஸ்ட் மாத மத்தியில் முதலமைச்சர் அலுவலகம் முழுவதுமாக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ஆவது தளத்தில் தற்போதுள்ள பெரிய மாநாடு கூடம் மற்றும் அதன் அருகிலுள்ள உணவக பகுதியை முதலமைச்சரின் அலுவலகமாக மாற்றும் பணிகள் பொதுப்பணித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பொருட்கள் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படுகிறதாம்.
ஏற்கனவே இந்த தளத்தில் இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, வணிகவரித்துறையின் சில பிரிவுகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதில் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட உள்ளது. மற்ற துறைகள் கோட்டை வளாகத்திற்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டிலா இப்படி ஒரு நிலை? மாணவர்களே கவனம்.. இந்த 2 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையே இல்லை..!!
முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்பட்டாலும், பொதுமக்கள் வந்து செல்வதற்கும் அதிகாரிகள் , அமைச்சர்கள் வந்து செல்வதற்கும் நிர்வாக பணிகள் தடையில்லாமல் நடப்பதற்கும் சிக்கல் இல்லாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறதாம். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அறைக்கு என பிரத்தியேக லிஃப்ட் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற திட்டம் இருப்பதாக சொல்லப்பட்டது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை தலைமை செயலகமாக மாற்ற ஆலோசனை நடப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. முதலமைச்சர் அலுவலகம் இடம் மாறுவது குறித்தும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான பணிகள் நடப்பதை தலைமை செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
More Articles
- பெண்களுக்கு சம்பளத்துடன் லீவ்..? விஜய் அரசுக்கு மதுரை நீதிமன்றம் கொடுத்த ஆலோசனை!
- ரூ.2500 மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவாரா விஜய்? – ஆகஸ்ட் 5இல் பட்ஜெட் தாக்கல்..!!
- பரந்தூர் விமான நிலையம்: விஜய் அரசின் நிலைப்பாடு தான் என்ன? மத்திய அரசு வேற இப்படி சொல்லுதே?
- விஜய்-இன் ஜனநாயகன் ரிலீஸில் இருக்கும் ரூ.200 கோடி சிக்கல்..!! இது புது கணக்கா இருக்கே?
- லஞ்ச ஒழிப்பு துறை சோதனை எதிரொலி: சென்னையில் 7 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!!
- கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்!