தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். இன்றளவும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை அரசு மலிவு விலையில் வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கும் ரேஷன் கார்டு தேவை. தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.
இது குறித்த அறிவிப்பையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதி முடிவதற்குள் அவர்கள் பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் கேஒய்சி செயல்முறை தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமே போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வேண்டும் என்பது தான். ஒரு சிலர் ரேஷன் கார்டுகளை தவறாகப் பயன்படுத்தி அரிசி மற்றும் இதர பொருட்களை வாங்கி அதை வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.
ITR தாக்கல் செய்தால் மட்டும் போதாது! இதை செய்யலன்னா உங்க ஃபைலிங் செல்லாது! ரீஃபண்ட் கிடைக்காது!
இன்னும் சிலர் இறந்தவர்களின் பெயரை ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்காமல் அரிசி வாங்கி வருகின்றனர். இதையெல்லாம் சரி செய்வதற்காகவே கைவிரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி இந்த செயல்முறையை முடித்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும் என்று அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
எனவே ரேஷன் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் இனி வரும் மாதங்களில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது.
இதுவரையில் ரேஷன் கடைகளில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்த மாதம் முடிய இன்னும் 6 நாட்களே இருக்கிறது. ஏற்கனவே இந்த செயல்முறையை முடித்திருக்கிறீர்களா என்பதையும் அங்குள்ள ஊழியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ரேஷன் கார்டில் இதுவரையில் இறந்தவர்களின் பெயரை நீக்காமல் வைத்திருந்தாலும் பிற குடும்ப உறுப்பினர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று டெத் சர்டிபிகேட் மற்றும் இதர ஆவணங்களை வழங்கி நீக்கல் செய்து கொள்ளலாம். TNPDS இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் இதை செய்து முடிக்கலாம்.
More Articles
- உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?
- ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை இணைச்சிட்டீங்களா? உங்களுக்கான எளிய வழி!
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? 10 நிமிடம் போதும்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு தகவலில் பிழையா? ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி
- பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த விஜய் அரசு! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு!
- கோவைக்கு வரும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா.. வேற லெவல திட்டம் போடும் தமிழக அரசு.!!