இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் கடந்த சில வருடங்களாக தங்களுடைய முக்கிய முதலீட்டு தளமாக வட - கிழக்கு மாநிலங்கள் மாற்றியுள்ளது. குறிப்பாக 7 சிஸ்டர்ஸ் என அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அசாம் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
அசாம் அரசு முதலீடுகளை ஈர்க்கவும், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வர்த்தக கொள்கைகளை அதிகளவிலான தளர்வுகள் உடன் கொண்டு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் ரிலையன்ஸ், டாடா, அதானி என நாட்டின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் நாட்டின் மற்ற மாநிலங்களை காட்டிலும் இப்பகுதியில் முக்கியமான மற்றும் பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் டாடா பவர் நிறுவனம் சுமார் 6,675 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஜிகாவாட் இன்காட் மற்றும் வேஃபர் உற்பத்தி ஆலையை ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. முதலில் இத்திட்டத்தை டாடா பவர் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டது.
அதன் பின் இரு மாநிலத்தின் சலுகைகள், உள்கட்டமைப்பு உதவிகளை ஆய்வு செய்து இறுதியாக ஆந்திராவை விடுத்து ஒடிசாவை தேர்வு செய்துள்ளது. இந்த முடிவு முழுக்க முழுக்க குறைந்த கட்டணத்தில் மின்சாரம், இதர சலுகைகள் அடிப்படையில் ஒடிசாவை தேர்வு செய்துள்ளதாக டாடா பவர் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.
இத்தொழிற்சாலைக்காக கோபால்பூர் பகுதியில் நிலம் தயாராக அரசிடம் உள்ளது, இந்த இடத்தில் டாடா ஸ்டீல் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க உள்ளது. நிலம் தயாராக இருக்கும் காரணத்தால் எங்களால் வேகமாக இத்திட்டத்தை செயல்படுத்தவும் முடியும் என பிரவீர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் இத்திட்டம் 2 கட்டங்களாக 5 ஜிகாவாட் அடிப்படையில் செயல்படுத்தப்படும், முதல் கட்டம் ஜனவரி 2028 முதல் துவங்கும், அதன் பின்பு அடுத்த 6 மாதத்தில் 2வது கட்டம் துவங்கும் என தெரிவித்தார்.
டாடா குழுமம் இதற்கு தனது ரூப்டாப் சோலார் திட்டத்தை ஒடிசாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவதாக அறிவித்தது. இதோடு 165 கோடி ரூபாய் மதிப்பிலாந ரயில்வே திட்டங்கள், கோபால்பூர் தொழிற்துறை பூங்கா அமைக்கும் திட்டத்தையும் டாடா குழுமம் ஒடிசாவில் செயல்படுத்த உள்ளது.
இதேபோல் 7 சிஸ்டர்ஸ் மாநிலத்தில் மற்றொரு முக்கியமான மாநிலமான அசாமில் 27000 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டம், 30000 கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் / மொபைல் உற்பத்தி திட்டம், 30000 கோடி ரூபாய் மதிப்பிலான ரினிவபிள் எனர்ஜி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
More Articles
- நோயல் டாடாவுக்கு 'லாபத்தால்' பதிலடி கொடுத்த சந்திரசேகரன்.. டாடா குழுமத்தின் அடுத்த பெரிய மாற்றம்!
- நா உள்ளே.. நீ வெளியே.. மங்காத்தா ஆடும் டாடா - மஹிந்திரா..!
- ஆகஸ்ட் 18.. டாடா குழுமத்திற்கு முக்கியமான நாள்.. என்.சந்திரசேரகன் எதிர்காலம் என்ன?
- ஓசூர் டாடா ஐபோன் ஆலை மூடப்படுகிறதா? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீஸால் அதிர்ச்சி!!
- சந்தையே சரிந்தாலும் தடம் மாறாத டாடா ஸ்டாக்! 3 நாளில் 58% உயர்வு.. தேஜஸ் நெட்வொர்க்ஸின் ரகசியம்?
- டாடா சன்ஸ் சந்திரசேகரன் பதவிக்கு ஆபத்து..? நோயல் டாடா விதித்த நான்கு நிபந்தனைகள்..!