அமெரிக்கா - ஈரானுக்கு மத்தியிலான போர் மிகப்பெரியதாக வெடித்திருக்கும் நிலையில், டிரம்ப்-ன் தலைக்கு ஏற்கனவே பெரும் தொகை கொடுக்கப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஈரான் டிரம்பை கொல்ல திட்டமிட்டு வருவதாக பல ரிப்போர்ட் அமெரிக்க அரசுக்கும், உளவுத்துறைக்கும் சென்றுள்ளது.
இந்த முக்கியமான சூழ்நிலையில் டிரம்ப் தனது பாதுகாப்பை முன்னிறுத்தி விமானத்தை மாற்றிள்ளார். கத்தார் அரசு அமெரிக்க அதிபரின் பயன்பாட்டுக்காக பரிசாக வழங்கிய போயிங் 747-8 என்ற பிரம்மாண்ட விமானத்தை தான் இதுநாள் வரையில் பயன்படுத்தி வந்தார் டிரம்ப்.
ஆனால் ஈரான் மூலம் ஏற்பட்டுள்ள உயிர் பயத்தால் அதிபருக்கான ஆஸ்தான விமானமாக விளங்கும் ஏர் ஃபோர்ஸ் ஓன்-க்கு மாறியுள்ளார். ஈரான் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் டிரம்ப் துருக்கி சென்ற போது Air Force One விமானத்தில் தான் பயணித்தார்.
இந்த மாத துவகத்தில் NATO அமைப்பின் உயர்மட்ட கூட்டத்திற்கு டிரம்ப் கலந்துக்கொள்ள Ankara பயணத்திற்கு திட்டமிட்ட போது, முக்கியமான மாற்றமாக ஏர் ஃபோர்ஸ் ஓன் விமானம் தேர்வு செய்யப்பட்டது.
தர்மேந்திர பிரதான் இடத்துக்கு வந்த பிரகலாத் ஜோஷி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாசம் பொறந்தா வங்கி கணக்கில்..
கத்தார் அரசு அமெரிக்க அரசுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை பரிசாக கடந்த ஆண்டு கொடுத்தது, பின்னாளில் இதை அதிபரின் பயன்பாட்டுக்காக மறுவடிவமைப்பு செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விமானத்தில் ஏர் போர்ஸ் ஓன் விமானத்தில் இருக்கும் சில முக்கிய பாதுகாப்பு அமைப்பு இதில் இல்லாத காரணத்தால் இதை தவிர்க்கப்பட்டு உள்ளது.
ஈரானுக்கு தற்போது டிரம்ப் முக்கியமான டார்கெட்டாக இருக்கும் வேளையில் பாதுகாப்பில் எவ்விதமான ரிஸ்க் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அமெரிக்க அரசு ஈரான் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தினால் அதில் இருந்து தப்பிக்க ஏர் போர்ஸ் ஓன் விமானத்திற்கு தான் மூழு திறன் உள்ளது.
இதனாலேயே விமானம் மாற்றப்பட்டு உள்ளது என சிபிஎஸ் நியூஸ், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஈரான் நாட்டின் ஆதரவு கொண்ட போராளிக் குழுக்களின் அமைப்பான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (Islamic Resistance in Iraq - IRI) டிரம்ப் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை பரிசாக அறிவித்துள்ளது. 020-ல் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் அமெரிக்க தனது ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதிற்கு பழிவாங்கும் விதிமாக அறிவித்துள்ளது.
More Articles
- சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!
- இந்திய பொருட்கள் மீது 10% வரி போட்ட டிரம்ப்.. மீண்டும் ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா.. எதற்காக தெரியுமா..?
- மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!!
- 50% வரி.. கனடாவை மிரட்டும் டிரம்ப்.. புதிய சட்டம், புதிய காரணத்தை கண்டுபிடித்த அமெரிக்க அரசு!
- டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 10 மில்லியன் டாலர் பரிசு.. ஈரான் IRI அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!
- டிரம்ப் அதிரடி.. 60 நாளுக்கு நான்-ஸ்டாப் தாக்குதல்.. ஈரான் மீது மீண்டும் போர் துவங்கியது..!