அமெரிக்கா - ஈரான் மத்தியில் புதிதாக வெடித்துள்ள போர் தாக்குதல் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது, கடந்த வாரம் அமெரிக்கா உளவு துறைக்கு இஸ்ரேல் உட்பட பல அமைப்புகள், பிரிவுகளிடம் இருந்து ஈரான் டிரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டுவதாக ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
இந்த ரிப்போர்ட்டை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்தும் வரும் அமெரிக்கா பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக டிரம்ப் சனிக்கிழமை ஈரானுக்கு முக்கியமான மிரட்டல் விடுத்துள்ளார், ஈரான் நாட்டை தாக்க 1000 ஏவுகணைகள் தயாராக இருப்பதாகவும், என்னை தாக்கவோ அல்லது என்னுடைய உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மாபெரும் தாக்குதலை ஈரான் சந்தித்திக்கும் என எச்சரித்துள்ளார் டிரம்ப்.
ஏற்கனவே அமெரிக்க கடந்த 3 நாட்களில் சுமார் 170 ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளது. இந்த நிலையில் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் அமெரிக்க அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஈரான் அரசும், ஈரான் ராணுவமும் டிரம்பை கொல்ல திட்டம் தீட்டுவதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் உளவுத்துறை அமைப்பு தகவல் கொடுத்துள்ளது.
இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படும் வேளையில், இஸ்ரேல் மீது அமெரிக்காவுக்கு இருந்த நிலைப்பாடு மாறியுள்ளதால் இஸ்ரேல் உளவுத்துறை கொடுத்த தகவலை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஈரான் மீதான தாக்குதல் மற்றும் போர் தொடுக்கும் டிரம்ப்-ன் முடிவில் இஸ்ரேல் influence செய்யும் ஒரு பகுதியாகவே இந்த உளவு துறை தகவலை பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் என்னுடைய உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த நொடி அமெரிக்க ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை தான் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'என்னை' அமெரிக்க அதிபரை கொலை செய்தால் 1000 ஏவுகணைகள் உடனடியாக ஈரானை நோக்கி தாக்குதலுக்கு தயாராக உள்ளது என தெரிவித்தார். இதேபோல் அமெரிக்க ராணுவம் அடுத்த வருடத்திற்கு ஈரானை மொத்தமாக காலி செய்ய தயாராக இருப்பதாக உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் ஈரான் தரப்பில், அமெரிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி அமெரிக்க அரசும். டிரம்பும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
More Articles
- இந்திய மாணவர்களுக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்.. வேலை செய்யணுமா.. 100000 டாலர் கட்டணம்..!
- காசா போரில் முக்கிய திருப்பம்..!! டிரம்ப் வெளியிட்ட குட் நியூஸ்..!! வெடிச்சத்தம் இல்லாத பொழுது விடியுமா?
- ஈரானுக்கு பயந்து விமானத்தை மாத்திய டிரம்ப்.. ஏர் போர்ஸ் ஓன் ரெடியானது ஏன்..?
- சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!
- இந்திய பொருட்கள் மீது 10% வரி போட்ட டிரம்ப்.. மீண்டும் ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா.. எதற்காக தெரியுமா..?
- மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்..!!