தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், முன்னாள் முன்னாள் நிதி மற்றும் ஐடி சேவை துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் முக்கிய பதிவை வெளியிட்டு உள்ளார்.

Advertisement

பழனிவேல் தியாகராஜன் தனது பதிவில், நாளை தமிழ்நாடு அரசு தனது முதல் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்று அவசர அவசரமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்தார்.

Advertisement

இதை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியின் முக்கிய குரலாகவும், தலைவராகவும் இகுக்கும் உதயநிதி ஸ்டாலினை ஒடுக்க முயல்வது, ஆளும் அரசின் பலவீனத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையுமே வெளிப்படுத்துகிறது என கடுமையான பதிவை பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் தெரிவித்தார்.

தவெக அரசு ஏற்கனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த எச்சரிக்கை மணியை அடித்திருந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள பட்ஜெட் மூலம் விஜய் அறிவித்த வாக்குறுதிகளை எதையெல்லம் நிறைவேற்றப்போகிறது என்ற கேள்வி அதிகமாக இருந்தது. இதேவேளையில் காவரி நீர் தொடர்பான விமர்சனங்களும், விஜய் மீது, அவரது அரசின் மீது இருந்த நிலையில் இந்த கைது சம்பவம் திசை திருப்பும் முயற்சியாக உள்ளது என பலரும் சமுக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

தஞ்சாவூரில் திமுக கட்சி சார்பில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னையில் உதயநிதி ஸ்டாலினின் நீலாங்கரை வீட்டிற்கு இன்று காலையே சென்ற தஞ்சாவூர் மற்றும் சென்னை போலீசார் வந்தனர். இதை தொடர்ந்து திமுக ஆதாரவாளர்களும், திமுக-வின் முத்த தலைவர்களும் உதயநிதி வீட்டிற்கு அடுத்த சில நிமிடங்களில் வந்தனர். இதை தொடர்ந்து கடும் எதிர்ப்பை தாண்டி உதயநிதியை கைது செய்யப்பட்டார்.

உதயநிதி கைதுக்கு எதிரார திமுக தரப்பில் போடப்பட்ட வழக்கு இந்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.