அமெரிக்கா - ஈரான் போர் போலவே உக்ரைன் - ரஷ்யா போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது, கடந்த வாரம் ரஷ்யா உக்ரைன் மீது பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் டிரோன் மூலம் ரஷ்யாவில் 3 எண்ணெய் மற்றும் ஏரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவில் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது எண்ணெய் வளம் தான், ஒருப்பக்கம் ஏற்றுமதிகள் மீது பல்வேறு நெருக்கடிகள் தொடர்ந்தாலும் உள்நாட்டு சப்ளை கட்டமைப்புகள் மீது தாக்குதல் மூலம் ரஷ்யாவின் இயக்கத்தையும், பொருளாதாரத்தையும் பெரிய அளவில் நிலைகுலைய வைத்து வருகிறது உக்ரைன்.

Advertisement

ரஷ்யாவில் Stavropol Krai என்ற இடத்தில் இருக்கும் 3 எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் Stavropol Krai-க்கும் உக்ரைனுக்கும் சுமார் 1200 கிலோமீட்டர் தூரம். உக்ரைன் சமீப காலமாக லாங்க் ரேஞ்ச் டிரோன், ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவை தாக்கி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தான் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை கொண்டு அழித்தது. இது ரஷ்யாவின் உள்நாட்டு சப்ளை செயினில் முக்கிய பங்கு வகிக்கும் ஆலையாகும்.

Advertisement

இன்று தாக்குதலுக்கு உள்ளான 3 எண்ணெய் மற்றும் எரிபொருள் கிடங்கில் லூக்ஆயில், ராஸ்னெப்ட் ஆயில் டிப்போ, இண்டஸ்ட்ரீஸ் ஆயில் டிப்போ மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் 3 கிடங்களுகளும் தீ பற்றி எறிந்த வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணெய் கிடங்கில் மொத்தம் 1 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான சேமிப்பு கட்டமைப்பு உள்ளது. இந்த 3 கிடங்குகளும் Stavropol Krai பகுதியில் அமைந்துள்ளது.