இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று வேலை செய்ய பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு விசா தான் ஹெச்1பி விசா. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அரசு அமைந்தது முதலே இந்த விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துவிட்டது. இந்த சூழலில் 3 ஆண்டுகளுக்கு ஹெச்1பி விசா வழங்குவதையே ரத்து செய்ய கூடிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் டெக் நிறுவனங்கள் திறன் மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த ஹெச்1பி விசாவையே பயன்படுத்துகின்றன. இந்த ஹெச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வருகை தருபவர்களில் 70% பேர் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் ஹெச்1பி விசா முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வகையில், புதிய சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலி கிரேன் என்பவரால் "End H-1B Visa Abuse Act of 2026" என்ற மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெச்1பி விசா நடைமுறையில் பல மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முடக்க வேண்டும் என இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2,00,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 1.9 கோடி ரூபாய்) ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்க கேட்டு கொண்டுள்ளது. தற்போதுள்ள ஆண்டுக்கு 65,000 என்ற விசா உச்சவரம்பை 25,000 ஆக குறைக்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
தங்கம் விலை மேலும் குறையும்..!! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட குட் நியூஸ்..!!
தற்போதுள்ள ரேண்டம் லாட்டரி முறைக்கு பதிலாக, ஊதியத்தின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் முறை கொண்டு வரப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் தங்களது குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதை தடுக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் நிரந்தர குடியுரிமைக்காக கிரீன் கார்டு விண்ணப்பம் செய்வதையும் தடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் தகுதியான அமெரிக்க தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே வெளிநாட்டினரை நியமிக்க வேண்டும் என்பன போன்ற கடுமையான விதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?
இந்த மசோதா சட்டமானால், அமெரிக்காவில் பணிபுரியத் திட்டமிடும் இந்திய ஐடி ஊழியர்கள் , மருத்துவர்கள் மற்றும் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தற்போது இந்த மசோதா ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. இது சட்டமாக மாறுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
ஒருவேளை நாடாளூமன்றத்தால் ஏற்கப்பட்டு டிரம்ப் கையெழுத்திட்டால் இது சட்டமாக மாறும். அமெரிக்காவில் தற்போது கூகுள் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா உள்ளிட்டோர் எல்லாம் இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்று செட்டிலானவர்கள் தான்.
More Articles
- அமெரிக்க அரசின் விசாரணை வளையத்தில் Cognizant..!! இந்திய ஐடி நிறுவனங்களுக்கு புது சிக்கல்..!!
- H1B விசா விவகாரத்தில் டிரம்புக்கு கொட்டு வைத்த நீதிமன்றம்!! இந்திய ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்!!
- 3 ஆண்டுகளுக்கு H1B விசா வழங்க தடை? இந்திய ஐடி ஊழியர்களை சுற்றி சுற்றி அடிக்கும் டிரம்ப்
- H1B விசா: $100000 கட்டணம் செலுத்த தயங்கும் அமெரிக்க நிறுவனங்கள்!! இந்திய டெக்கிகளே கவனம்!!
- H1B விசா திட்டத்தையே ரத்து செய்கிறதா அமெரிக்க அரசு? நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!
- ஓராண்டுக்கு H1B visa நேர்காணல்கள் இல்லை!!அமெரிக்க தூதரகங்களின் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!!