வளைகுடா நாடுகளில் போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, 5 நாட்களுக்கு பின்பு அமெரிக்கா - ஈரான் மத்தியில் போர் துவங்கிய இதேவேளையில், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க இணைந்து ஈராக் நாட்டில் புதிய தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.

Advertisement

இந்த வார துவக்கத்தில் ஈரான் நாட்டிற்கு ஆதரவாக ஈராக் நாட்டில் செயல்படும் Popular Mobilisation Forces (PMF) என்ற கிளர்ச்சியார்கள் அமைப்பு சவுதியில் கிழக்கு மாகாணத்திலும், ரியாத்திலும் இருக்கும் எண்ணெய் கட்டமைப்பு மற்றும் அமெரிக்கா ராணுவத்தின் மீதும் ட்ரோன் தாக்குதலை ஈராக் நாட்டில் இருந்து நடத்தியது.

Advertisement

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை சவுதி அரேபிய ராணுவம் மற்றும் அமெரிக்காவின் சென்ட்காம் இணைந்து ஈராக் நாட்டில் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் Popular Mobilisation Forces (PMF) அமைப்பை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளதாக PMF அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின்பு சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாங்க போர் தாக்குதல் தொடர வேண்டும் என விரும்பவில்லை, ஆனால் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கட்டாயம் பதில் தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்துள்ளது.

Advertisement
ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!

ஏற்கனவே சவுதி அரேபியாவின் எண்ணெய் போக்குவரத்து கட்டமைப்பு மீது யெமன் நாட்டின் ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தயிருக்கும் வேளையில், ஈராக் நாட்டில் இருந்தும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

PMF அமைப்பு என்பது ஈராக் நாட்டில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் குடை அமைப்பாகும். இந்த அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக உள்ளது, மேலும் இந்த அமைப்பில் இருப்போருக்கு ஈரான் பயிற்சி கொடுத்து தயார்படுத்துகிறது. ஆனால் ஈரான் ஆதரவில் இயங்கும் அமைப்புகள் சவுதி மீதான தாக்குதலுக்கும் எங்களும் எவ்விதமான தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் சவுதி திட்டமிட்டு எங்கள் மீது பழி போடுகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement
35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா?

அமெரிக்கா மற்றும் ஈராக் அரசுக்கு மத்தியிலான தொடர்ந்து PMF அமைப்பு முக்கிய விவாத பொருளாகவே உள்ளது, ஈராக் சட்டத்தின் படி அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் PMF ஒரு பகுதியாகும், இந்த அமைப்பு ஈராக் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் ஈராக்-ன் முந்தைய அரசு இந்த அமைப்பை அங்கீகரிக்கப்படவில்லை.